உலகம் ரொம்ப பெரிசு.. அதில் அமெரிக்கா ஒரு துளி தான்.. அமெரிக்கா போகாதீங்க.. எங்க நாட்டுக்கு வாங்க.. இந்தியர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ஜெர்மனி.. கைநிறைய சம்பளம்.. அமெரிக்காவை விட சொகுசான வாழ்க்கை.. இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளை இறுக்கி வரும் நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இந்திய மாணவர்களுக்கும், திறமையான தொழிலாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளின் கதவை திறந்துவிட்டுள்ளது. இது…

germany

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளை இறுக்கி வரும் நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இந்திய மாணவர்களுக்கும், திறமையான தொழிலாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளின் கதவை திறந்துவிட்டுள்ளது. இது வெளிநாட்டில் வாழ விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கிறது.

ஜெர்மனியில் தற்போது 60,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இது ஜெர்மனியில் உள்ள சர்வதேச மாணவர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னாலேனா பேர்போக், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்திய திறமையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்குவதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தைக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்திய தொழிலாளர்கள் ஜெர்மனியில் தங்கள் பணியிடங்களில் சிறப்பாக செயல்படுவதுடன், சராசரியை விட அதிக வருமானத்தையும் ஈட்டுகின்றனர் என்றும், அதுமட்டுமின்றி இந்தியர்கள் ஜெர்மன் சமூகத்துடன் சிறந்த முறையில் இணைந்துள்ளனர் என்றும் அவர் பாராட்டினார்.

ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஜெர்மன் நிறுவனங்களில் 1.4 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கட்டுமானத் தளங்கள் என பல துறைகளில் இந்த தேவை பரவலாக உள்ளது. தற்போதைய நிலையில் ஜெர்மனியின் மொத்த தொழிலாளர்களில் 16% பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இது 2010 இல் இருந்ததை விட இரு மடங்கு அதிகம். இந்த நிலையில் பணியாளர்களின் தேவையை சமாளிக்க, ஜெர்மனிக்கு ஆண்டுதோறும் சுமார் 500,000 திறமையான பணியாளர்கள் அழைத்து வரவும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகமான திறமையானவர்களை அழைத்து வரவும் ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஜெர்மனியில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று அந்நாட்டின் மொழி. எனவே வேலைவாய்ப்பு தேடும் இந்தியர்கள் ஜெர்மன் மொழியினை ஓரளவு தெரிந்து கொள்வது இப்போது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. பலருக்கு வேலை கிடைப்பதில் இது ஒரு பெரிய தடையாக இருக்கிறது இந்த மொழி பிரச்சனை தான். இருப்பினும், ஜெர்மனி இந்த சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. தற்போது இந்தியாவில் 58 ஆக உள்ள ஜெர்மன் மொழி பள்ளிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையை சேர்ந்த மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி தேவைகளில் சில தளர்வுகள் உள்ளன. ஆனால் மேலாண்மை, மனிதவளம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு மொழிப்புலமை மிகவும் அவசியமாகிறது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த சூழலில், ஜெர்மனி, இந்தியர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இது இந்தியர்களுக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.