மக்களை சந்திக்க கிளம்பிவிட்டார் விஜய்.. தமிழக அரசியலை புரட்டி போடும் ஒரு பயணம்.. குவார்ட்டரும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் கூட்டும் அரசியல் கட்சிகள் காணாமல் போகும்.. உண்மையான மக்களாட்சியை 2026ல் மக்கள் பார்ப்பார்கள்..!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் மிரள வைத்துவிட்ட…

vijay1

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் மிரள வைத்துவிட்ட நிலையில் தற்போது அவர் நேரடியாக மக்களை சந்திக்க இருக்கிறார். இந்த மக்கள் சந்திப்பு பயணத்தின் முதல் கட்டமாக திருச்சியில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறார்.

விஜய்யின் இந்தப் பயணத்தால், தமிழகத்தில் ஒரு மிகப்ரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். “1967-ல் அண்ணா, 1977-ல் எம்.ஜி.ஆர். எப்படி ஒரு மக்கள் புரட்சியை உண்டாக்கினார்களோ, அதேபோல 2026-ல் விஜய் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்குவார்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் பாரம்பரிய வாக்காளர்கள், “காலம் காலமாக இந்த இரு கட்சிகளுக்கும் வாக்களித்து விட்டோம்; இப்போது ஒரு மாற்றம் தேவை” என்று கருதுவதாகவும், அவர்களில் பலர் விஜய்க்கு வாக்களிக்க தயாராக இருப்பதாகவும் த.வெ.க.வினர் தெரிவிக்கின்றனர்.

‘சமூக நீதி’ என்பது உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை கொடுப்பது என்றும், ஆட்சியில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது தான் உண்மையான சமூக நீதி என்றும் வாதிடுகின்றனர். கூட்டணி கட்சிகளின் உதவியுடன் திமுக ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

விஜய்யின் “அங்கிள்” என்ற அழைப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த த.வெ.க.வினர், அது ஒரு மரியாதையான மற்றும் உரிமையான வார்த்தை என்றும், அது அரசியல் ரீதியான விமர்சனம் இல்லை என்றும் விளக்கமளிக்கின்றனர். திமுகவின் பல தலைவர்கள் இதற்கு முன் பேசிய விமர்சனங்களை சுட்டிக்காட்டி, ‘அங்கிள்’ என்ற வார்த்தை மிகவும் கண்ணியமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.

கட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு நெருக்கடிகள் வருவதாக த.வெ.க.வினர் கூறுகின்றனர். மாநாடு நடத்த அனுமதி மறுப்பது, வாகன ஓட்டுநர்களை மிரட்டுவது, மற்றும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை மறிப்பது போன்ற பல தடைகள் உருவாக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“இந்த நெருக்கடிகள், நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்” என்றும், “எங்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள்” என்றும் த.வெ.க.வினர் தெரிவிக்கின்றனர். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பது, மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதற்கான சான்றாக காட்டப்படுகிறது.