விஜய் மீது எல்லா கட்சிக்கும் கோபம்.. ஏனெனில் அவர் எல்லோருடைய ஓட்டையும் உடைக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் நடுத்தெருவில் நிற்கும்.. மெகா கூட்டணியால் இருந்தாலும் அதிருப்தியால் திமுக கூட்டணி தோற்கும்: பத்திரிகையாளர் மணி..!

திமுக அரசின் தவறான செயல்பாடுகளின் சுமையை அதன் கூட்டணிக் கட்சிகள் சுமக்கத் தொடங்கியுள்ளன என்றும், அதன் விளைவுகளை திமுகவை விட கூட்டணிக் கட்சிகளே அதிகம் அனுபவிக்கும் என்றும் அரசியல் விமர்சகர் மணி சமீபத்தில் அளித்த…

dmk 1

திமுக அரசின் தவறான செயல்பாடுகளின் சுமையை அதன் கூட்டணிக் கட்சிகள் சுமக்கத் தொடங்கியுள்ளன என்றும், அதன் விளைவுகளை திமுகவை விட கூட்டணிக் கட்சிகளே அதிகம் அனுபவிக்கும் என்றும் அரசியல் விமர்சகர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திமுக செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் கூட்டணிக் கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ், திமுகவுக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருப்பது அவலமானது. இது, அவர்களுக்குள்ள வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும் என்றும் மணி தெரிவித்தார்..

தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களை மீறி, பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளது. 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பொறுப்பு டிஜிபி என்ற பதவியே சட்டத்தில் இல்லை. உடனடியாக ஒரு நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது நிர்வாக தோல்வியை காட்டுகிறது. ஒரு தகுதியற்ற அதிகாரியை இந்த பதவிக்கு நியமித்ததால், காவல்துறையின் மனஉறுதி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயத்திலும், கூட்டணிக் கட்சிகள் திமுகவுக்கு எதிராகப் பேசாமல், நியாயமற்ற முறையில் முட்டு கொடுக்கின்றன. இது, “ராஜாவை விட ராஜ விசுவாசம்” காட்டுவதை போன்றது. இதன் விளைவாக, பொதுமக்கள் மத்தியில் இந்த கட்சிகளின் மீது அதிருப்தி ஏற்படும்.

தமிழ்நாடு அரசியலில், நடிகர் விஜய் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வருகிறார். அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் வாக்குகளையும் உடைப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, விசிக போன்ற கட்சிகளின் வாக்குகளைப் பெரிதும் பாதிப்பார் என்று கணிக்கப்படுகிறது எனவும் மணி கூறினார்.

திமுகவின் தவறுகளுக்கு அதன் கூட்டணி கட்சிகள் துணை போவதால், வரவிருக்கும் தேர்தல்களில் அந்த கட்சிகள் தங்கள் செல்வாக்கையும், வாக்கு வங்கியையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும். குறிப்பாக, விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள், அவர்களுக்கிருந்த 1% வாக்குகளையும் இழப்பார்கள் என்றும் மணி கணித்துள்ளார்

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியான முரண்பாடுகளை தவிர்த்து, வெறும் பதவிக்காக மட்டுமே இணைந்துள்ளன. இது, 2011-ல் திமுக சந்தித்த தோல்விக்கு வழிவகுத்தது போல், வரவிருக்கும் தேர்தல்களிலும் ஒரு பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் மணி தெரிவித்தார்.