ஒரே ஒரு போட்டோ.. அமெரிக்காவை காலி செய்த மோடி.. இந்திய இளைஞர்களே, இனி அமெரிக்காவை நம்பாதீர்கள்.. தாய்நாட்டுக்கு வாருங்கள்.. அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுங்கள்.. அமெரிக்காவில் இனி ஒன்றும் தேறாது..!

இன்றைய உலகின் அரசியல் களத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தகப் போர் குறித்து உலகமே விவாதித்து வருகிறது. குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் இந்தியாவை குறிவைத்து விதித்த வரியால் ஏற்பட்ட பரபரப்பான சூழலில், ஒரே…

modi putin

இன்றைய உலகின் அரசியல் களத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தகப் போர் குறித்து உலகமே விவாதித்து வருகிறது. குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் இந்தியாவை குறிவைத்து விதித்த வரியால் ஏற்பட்ட பரபரப்பான சூழலில், ஒரே ஒரு புகைப்படம் ஒட்டுமொத்த உலக அரங்கில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுதான் பிரதமர் மோடியின் பவர்.

சீன அதிபர் ஷீ ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒன்றாக சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம், இந்த ஆண்டின் மிக முக்கியமான, வைரலான புகைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அமெரிக்க ஊடகங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் என அனைவராலும் இது விவாதிக்கப்பட்டு வருகிறது. இது அமெரிக்க மக்களின் மனநிலையையும், அந்த நாட்டின் எதிர்கால சிந்தனையையும் பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது. ஆன்மீகத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று கடவுள்கள் இருப்பது போல் உலக அரசியலில் இந்த மூவரும் உள்ளனர்,.

அமெரிக்காவின் முக்கிய அரசியல் விமர்சகரான வான் ஜோன்ஸ், இந்த புகைப்படத்தை பற்றிப் பேசுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். இது புதிய உலக ஒழுங்கிற்கான ஒரு திருப்புமுனை. இது வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “எதிர்காலத்தில், நாம் திரும்பிப் பார்க்கும்போது, இந்த புகைப்படம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். ஷீ ஜின்பிங், புதின், மோடி, வடகொரியா மற்றும் ஈரானின் தலைவர்கள் ஒன்றாக நிற்பது, ஒவ்வொரு அமெரிக்கனின் முதுகெலும்பிலும் ஒரு பயத்தை ஏற்படுத்தும்” என்று வான் ஜோன்ஸ் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மேற்குலகம் இப்போது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் நமக்கு எதிராக மாறிவிட்டார்கள்” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். இது அமெரிக்கர்களின் மனப்பான்மையை தெளிவாகக் காட்டுகிறது.

அமெரிக்கா நீண்ட காலமாக தங்களை உலகத்தின் முதல் சக்தியாக கருதி வந்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் கூட, அமெரிக்கா உலகை ஒரு அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதாகவே சித்தரிக்கப்பட்டது. உதாரணத்திற்கு, வியட்நாம் போர் பற்றிய திரைப்படங்களும், ஏலியன்கள் உலகை ஆக்கிரமிக்க வரும்போது அமெரிக்காதான் ரட்சகனாக வந்து காப்பாற்றும் போன்ற திரைப்படங்களும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்க ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஒன்றுசேர்ந்து, அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுகின்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். இதன் விளைவாக, அமெரிக்கர்கள் மத்தியில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது.

ஒரு காலத்தில், அமெரிக்கா மற்றும் சீனா நல்ல உறவில் இருந்தன, ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இன்று, அமெரிக்கா ஒரு முக்கோணத்தின் மோசமான பக்கத்தில் இருப்பதாக வான் ஜோன்ஸ் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான தனிப்பட்ட சந்திப்புகளில் என்ன நடந்தது என்பது ஐரோப்பிய தலைவர்களுக்கு கூட தெரியாது. ஆனால், புதின், பிரதமர் மோடியிடம் அந்த சந்திப்பு பற்றி பேசியுள்ளார். இது, தங்களுக்குள் உள்ள தனிப்பட்ட நம்பிக்கையையும், நட்பையும் வெளிப்படுத்துவதோடு, அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் நியூயார்க் டைம்ஸ் “தலைவர்களுக்கு இடையேயான நெருங்கிய பிணைப்பு, அமெரிக்கா இல்லாத புதிய உலக ஒழுங்கை உருவாக்குகிறது” என்று எழுதியது. அதேபோல, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை “அமெரிக்க எதிர்ப்பு அச்சு” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது.

ஷீ ஜின்பிங், சமீபத்தில் அமெரிக்காவை மறைமுகமாக தாக்கும் விதமாக, “பனிப்போர் மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், அச்சுறுத்துவதையும் மிரட்டுவதையும் நிறுத்துவோம்” என்று கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கை காட்டுகிறது. ஐ.நா.வின் பல அமைப்புகள் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சமூக ஊடகங்களில், இந்தியர்களுக்கு விசா வழங்குவதை குறைக்குமாறு, அல்லது கால் சென்டர்களுக்கு வரி விதிக்குமாறு பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இது அமெரிக்க மக்களிடையே பரவும் வெறுப்புணர்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, வெளிநாடுகளில் வேலை தேடும் இந்திய இளைஞர்கள் அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்காமல், மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். ஜெர்மனி, சுவீடன் போன்ற பல நாடுகள் இந்திய திறமையாளர்களை வரவேற்கின்றன. இந்த புதிய புவிசார் அரசியல் சூழலை புரிந்துகொண்டு, நமது எதிர்காலத்தை திட்டமிடுவது மிக முக்கியம்.