விஜய்யுடன் செங்கோட்டையன் ரகசிய பேச்சுவார்த்தையா? அதிமுகவின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தவெகவில்? காலியாகிறது அதிமுக கூடாரம்.. தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் வெளியேறினால் அதிமுக ஜீரோ.. தனிமரமாகும் ஈபிஎஸ்..

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சிக்கு அவர்கள் செல்ல வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான…

vijay admk

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சிக்கு அவர்கள் செல்ல வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க.வின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் த.வெ.க.வில்?

செங்கோட்டையன்: அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காலக்கெடு விதித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது விஜய்யின் கட்சிக்கு அவர் செல்வதற்கான முதல் அறிகுறி அல்லது அதிமுகவை ஈபிஎஸ் இடம் இருந்து கைப்பற்றி தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்க தலைவர் த.வெ.க.வுடன் கூட்டணியில் இணைந்தால், அது விஜய்யின் கட்சிக்குக் கூடுதல் பலத்தையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தும்.

தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார்: எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக அறியப்படும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் கூட, தலைமை மீதான அதிருப்தியால் வெளியேறலாம் என பரவலாக பேசப்படுகிறது. இந்த தலைவர்கள் தங்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதரவாளர்களின் பலத்தை கொண்டுள்ளனர். இவர்கள் வெளியேறினால், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி மற்றும் கட்சி அமைப்பு மிகவும் பலவீனமடையும்.

அ.தி.மு.க.வின் முக்கிய தூண்களாக கருதப்படும் இந்த தலைவர்கள் வெளியேறினால், கட்சி அதன் செல்வாக்கை முற்றிலுமாக இழக்க நேரிடும். ஏற்கெனவே, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் போன்றோர் வெளியேறிய நிலையில், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் போன்றோரும் வெளியேறினால், அ.தி.மு.க.வின் நிலைமை மிகவும் மோசமடையும். எடப்பாடி பழனிசாமி தனித்து விடப்படுவார் என்றும், அவர் தன் ஆதரவாளர்களுடன் மட்டுமே அரசியல் களத்தில் நிற்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது அ.தி.மு.க.வை “ஜீரோ” நிலைக்கு கொண்டு செல்லக்கூடும்.

விஜய்யின் அரசியல் வியூகம்

நடிகர் விஜய், தனது கட்சிக்கு மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளார். கட்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க, வெறும் இளைஞர்கள் மற்றும் ரசிகர் பட்டாளம் மட்டும் போதாது; அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்களும் தேவை என்று அவர் கருதுவதாக தெரிகிறது. இதன் காரணமாக, அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள தலைவர்களுடன் அவர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

இந்த சூழல், தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையக்கூடும். எடப்பாடி பழனிசாமி தனது தலைமையை பாதுகாத்து, கட்சியை ஒருங்கிணைப்பாரா அல்லது மூத்த தலைவர்கள் ஒரு தனி அணி அமைத்து த.வெ.க.ய்வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார்களா? என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும்.