நீ படிச்ச ஸ்கூல்ல இந்தியா ஹெட்மாஸ்டர்டா.. டிரம்பை பொளந்து கட்டிய அமெரிக்க பத்திரிகையாளர்.. உலக வரலாற்றையே மாற்றியது இந்தியா தான்.. இனி அமெரிக்கா, ஐரோப்பா பேச்சு எடுபடாது..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்தியா மீதான வர்த்தக கொள்கைகள் குறித்து அமெரிக்க அரசியல் விமர்சகர் ரிக் சான்சஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிர்ப்பு…

trump modi

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்தியா மீதான வர்த்தக கொள்கைகள் குறித்து அமெரிக்க அரசியல் விமர்சகர் ரிக் சான்சஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீது டிரம்ப் இறக்குமதி வரிகளை விதித்ததை அவர் “அவமானகரமானது மற்றும் அறியாமை நிறைந்தது” என்று வர்ணித்துள்ளார்.

“இந்தியாவை பள்ளி மாணவனை போல் நடத்துவது அவமானம்” என்று கூறிய
ரிக் சான்சஸ், அமெரிக்காவின் இந்த முடிவை “முட்டாள்தனமானது” என்று வர்ணித்து, இந்தியாவை சாதாரணமாக எடை போட வேண்டாம் என டிரம்பை எச்சரித்துள்ளார்.

“அமெரிக்கா இந்தியாவை ஒரு பள்ளி மாணவனைப் போல நடத்துகிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பாடம் கற்பிக்கிறது” என்று சான்சஸ் கூறினார்.

“பெரும்பாலானோர் இந்தியாவின் வரலாறு மகாத்மா காந்தியுடன் தொடங்கியது என்று நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பாவும், மெசபடோமியாவும் உலகிற்கு அளித்த பங்களிப்பை விட இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட வளமான வரலாற்றை கொண்ட ஒரு நாட்டை பள்ளி மாணவனை போல் நடத்துவது மிகப்பெரிய அவமானம்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

டிரம்பின் முடிவுகள் சில சமயங்களில் வெறுப்பு மற்றும் அறிவியல் பூர்வமற்ற சிந்தனைகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும், ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டில் புத்திசாலித்தனமாகவும், உறுதியாகவும் நின்றதாகவும் சான்சஸ் பாராட்டினார். “நாங்கள் யாரிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டாம்” என்று இந்தியா அமெரிக்காவுக்கு அளித்த பதில் உலக வரலாற்றையே மாற்றிய ஒரு திருப்புமுனை தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகை ஆண்டு வந்த அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும், அந்த அதிகாரம் தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளை உள்ளடக்கிய தெற்கத்திய நாடுகளுக்கு மாறப்போவதாகவும் சான்சஸ் கணித்துள்ளார்.

ரிக் சான்சஸின் இந்த விமர்சனம், தனிப்பட்ட கருத்தாக இல்லாமல், மாறிவரும் உலக மாற்றத்தை காட்டும் ஒரு கண்ணாடியாக உள்ளது. இந்தியா இனி யாருடைய கட்டளைகளுக்கும் அடிபணியாது என்பதையே இது உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.