கடைசியாக இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.. இந்தியாவை எச்சரித்த டிரம்ப்.. ‘முடியாது’ உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ.. கெத்து காட்டிய மோடி.. எச்சரித்தால் உடனே பயப்பட இது பழைய இந்தியா இல்லை.. இது மோடியின் இந்தியாடா…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை கடுமையாக விமர்சித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை “ஒருதலைப்பட்சமான பேரழிவு” என்று வர்ணித்துள்ளார். அதே சமயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவில் ரஷ்ய அதிபர்…

modi trump 2

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை கடுமையாக விமர்சித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை “ஒருதலைப்பட்சமான பேரழிவு” என்று வர்ணித்துள்ளார். அதே சமயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான “சிறப்பு மற்றும் சலுகை பெற்ற” உறவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இரு நிகழ்வுகளும், உலக அரங்கில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர பதற்றத்தை அதிகரித்துள்ளன.

டிரம்ப்பின் குற்றச்சாட்டும், இந்தியாவின் தாமதமான செயலும்

அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனால் அமெரிக்க நிறுவனங்களால் இந்தியாவில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை என்றார்.

மேலும், இந்தியா தனது வரிகளை பூஜ்ஜியமாக குறைப்பதாக மிக தாமதமாக முன்வந்ததாகவும், இது பல ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு

டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்த அதே நாளில், பிரதமர் மோடி சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பு தான் டிரம்புக்கு கொடுத்த மறைமுக பதிலடியாக பார்க்கப்படுகிறது. மேலும், “கடினமான சூழ்நிலைகளில் கூட இந்தியாவும் ரஷ்யாவும் எப்போதும் கைகோர்த்து நிற்கின்றன” என்று கூறிய மோடி, இரு நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்பு உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

முரண்பட்ட இராஜதந்திர நிலைப்பாடு

டிரம்ப் இந்தியாவை கடுமையாக விமர்சித்தபோதும், அதே நாளில் புது டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்தியாவுடனான உறவுகள் புதிய உயரங்களை எட்டி வருவதாக நம்பிக்கையுடன் அறிக்கை வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிக முக்கியமானது என்று கூறினார்.

இந்த முரண்பட்ட நிலைப்பாடுகள், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் இந்திய அரசு எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றத்தை காட்டுகிறது. இந்த வர்த்தகப்போர், ரஷ்யா போன்ற மற்ற நாடுகளுடன் இந்தியா தனது உறவை வலுப்படுத்துவதன் மூலம் பதிலடி கொடுக்கிறது என்பதையும் இது உணர்த்துகிறது.

கடைசியாக இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு தருவதாகவும், அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்காஅ வரியை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளார். அதற்கு பிரதமர் மோடி, ரஷ்யா, சீனா அதிபர்களுடன் சந்தித்து பேசியது தான் பதிலடியாக பார்க்கப்படுகிறது.