டிரம்ப் மரணம் என்ற வதந்தி உண்மையில் டிரம்ப் மரணத்தை குறிக்கவில்லை.. அமெரிக்க பொருளாதாரம் மரணம்.. வல்லரசு என்ற தகுதிக்கு ஏற்பட்ட மரணம்.. ஒரு வல்லரசை ஒரே ஒரு நபர் அசிங்கப்படுத்திய வரலாறு.. இனி மீண்டு வர வாய்ப்பே இல்லை..!

அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளுடன் குறிப்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடன் கொண்டுள்ள உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் குறித்து சர்வதேச பொருளாதார, அரசியல் வல்லுனர்கள் அலசி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின்…

trump

அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளுடன் குறிப்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடன் கொண்டுள்ள உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் குறித்து சர்வதேச பொருளாதார, அரசியல் வல்லுனர்கள் அலசி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் தலைமையும், அதன் ஒருதலைப்பட்சமான வர்த்தக கொள்கைகளும் உலக அரங்கில் எவ்வாறு பதற்றத்தை உருவாக்குகின்றன என்பதை கூறி வருகின்றனர்.

அமெரிக்கா – இந்தியா உறவில் பிளவு

வரிவிதிப்பும் ஈகோ மோதலும்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் இறால் மற்றும் ஜவுளி போன்ற பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே இருந்த மோதலை நான் தான் தடுத்து நிறுத்தியதாக கூறி, அமைதிக்கான நோபல் பரிசை பெற ட்ரம்ப் விரும்பினார். ஆனால், இந்தியா அதனை ஏற்கவில்லை. இந்த கோபம் தான், ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு வரி விதித்ததற்கு முதல் காரணமாக கூறப்படுகிறது.

இரண்டாவதாக ட்ரம்ப் நான்கு முறை அழைத்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலை காட்டுவதாக அமைந்துள்ளது.

அமெரிக்கா ஜப்பான் மீது 25% வரி விதித்தபோது, ஜப்பான் 550 பில்லியன் டாலர் அமெரிக்காவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. இதனால் வரி 15% ஆக குறைக்கப்பட்டது. ஆனால், அந்த முதலீட்டின் லாபத்தில் 90% அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தது. இதனால் ஜப்பான் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, ஜப்பான் இந்தியாவுடன் தனது உறவுகளை வலுப்படுத்திக்கொண்டது. பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இது, அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படுவதை காட்டுகிறது.

வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததும் அமெரிக்காவின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் விமர்சனம் செய்யப்படுகிறது.

அமெரிக்க ஊடகங்களே, ட்ரம்ப்-இன் இந்த “முட்டாள்தனமான முடிவுகளால்” அமெரிக்க மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று விமர்சித்துள்ளன. மேலும், இந்த வரிகள் ஒரு நியாயமான பொருளாதார கொள்கை அல்ல, மாறாக ஒரு தனிப்பட்ட ஈகோ மோதல் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமருக்கு ஒரு ரகசியக் கடிதம் அனுப்பியதாகவும், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உலகின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இது, அமெரிக்காவை தனிமைப்படுத்தும் புதிய முயற்சி உருவாகி வருவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

மொத்தத்தில் சமீபத்தில் டிரம்ப் மரணம் என்ற வதந்தியின் உண்மையான அர்த்தம் டிரம்ப் மரணம் அடைந்துவிட்டார் என்பதல்ல, அமெரிக்க பொருளாதாரம் மரணம் அடைந்துவிட்டது, வல்லரசு என்ற தகுதிக்கு மரணம் ஏற்பட்டுவிட்டது என்பதே பொருள் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,