அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் பல காரணங்களால் வலுப்பெற்றன.
ட்ரம்ப்பின் வயதின் காரணமாக, இரத்த ஓட்டம் குறைந்து அவரது கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரது உடல்நிலை தொடர்பான ஒன்று எனவும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வதந்திகளுக்கு மேலும் உந்துதலை அளித்தது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ட்ரம்பிற்கு ஏதாவது நேர்ந்தால் பதவியேற்க தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “நான் அதற்காகப் பயிற்சி பெற்று வருகிறேன்” என்று பதிலளித்தது மேலும் பல சந்தேகங்களை எழுப்பியது.
ஒரு முக்கியமான நபரின் மரணத்தின் போது கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அதேபோல் நேற்று அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இது ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து ஊகங்களை அதிகரித்தது. எனினும், இந்த கொடி ஒரு பள்ளி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவே இறக்கப்பட்டது என்பது பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.
ட்ரம்ப்பின் மரணம் குறித்த ஒரு போலியான “சிம்சன்ஸ் கணிப்பு” இணையத்தில் பரவியது. இது வதந்திகளை பரப்பியது. ஆனால் உறுதி செய்யப்பட்ட தகவலின்படி ட்ரம்ப் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை எனவும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் பிரதமர் மோடியின் சீனப் பயணம், டிரம்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம் என்றும், அவரது உடல்நலக்குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளுக்கு பிறகு சீனாவிற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று நாடுகளும், அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பத்திற்கு எளிதில் அடிபணியாதவை என்பதால், இந்த சந்திப்பு ட்ரம்புக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கும் என்றும், இந்த அதிர்ச்சியில் தான் டிரம்புக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
