ஒரு காலத்தில் “வளரும் நாடு” என்றும் “பின்தொடரும் நாடு” என்றும் கருதப்பட்ட இந்தியா, இப்போது ஒரு புதிய உலக சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது. அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகளால் கூட இந்தியாவுக்கு இனி பயம் இல்லை என்பதை பல நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த மாற்றத்திற்கான காரணங்களை சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் விளக்குகின்றனர்.
பயத்தின் அடிப்படையிலான செல்வாக்கின் நிராகரிப்பு
அமெரிக்கா மற்றும் பிற வல்லரசுகள், வரலாற்றில் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்த, பொருளாதார தடைகள், ராணுவ பலம் அல்லது தனிமைப்படுத்துதல் போன்ற பயத்தின் அடிப்படையிலான உத்திகளை பயன்படுத்தி வந்தன. ஆனால், பல நூற்றாண்டுகளாக காலனித்துவம், பிரிவினை, போர், பஞ்சம் மற்றும் பொருளாதார சவால்களை சந்தித்த இந்தியாவுக்கு இந்த உத்திகள் இனி பலனளிக்காது, இந்தியா இனி யாருக்கும் அடிபணியாது. யாரையும் அடிபணிய வைக்காது.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா அடைந்து வரும் விரைவான வளர்ச்சி, உலகின் பெரிய சக்திகளுடன் சமமாக பேச்சுவார்த்தை நடத்தும் நம்பிக்கையை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இது, இந்தியாவின் புதிய பலத்தைக் காட்டுகிறது.
தன்னம்பிக்கை மற்றும் தனித்துவமான அணுகுமுறை
இந்தியாவின் புதிய பலம் ஆணவத்தில் இருந்து வரவில்லை, மாறாக ஆழ்ந்த தன்னம்பிக்கையில் இருந்து வருகிறது. இந்தியா இனி மற்ற நாடுகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல், தனக்கான பாதையை தானே வகுத்துக்கொள்கிறது. இந்த மனப்பான்மை, இந்தியாவின் புதிய ஆற்றலுக்கு அடிப்படையாக உள்ளது.
இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையில் முழுமையான சுதந்திரத்தை கடைப்பிடிக்கிறது. இது அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற எந்த ஒரு குறிப்பிட்ட வல்லரசுடனும் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளவில்லை. இந்த சுதந்திரம் இந்தியாவுக்கு ஒரு பலமாக அமைகிறது. இதனால், எந்த ஒரு நாடும் இந்தியாவை தனிமைப்படுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ முடியாது, ஏனெனில் இந்தியாவுக்கு பல நாடுகளுடன் கூட்டாண்மை உள்ளது. பிரதமர் மோடியின் உலகளாவிய சுற்றுப்பயணத்தால் இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன.
இந்தியாவின் இளைஞர்கள் மத்தியில் உள்ள அபரிமிதமான திறமையையும் லட்சியத்தையும் சர்வதேச வல்லுனர்கள் கவனித்து வருகின்றனர். இந்திய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உலகளவில் பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கின்றனர். இத்தகைய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உலகத் தலைவர்களாக இருக்கும்போது, அமெரிக்காவால் இந்தியாவை மிரட்ட முடியாது என்பது தான் நிஜம். மீறி மிரட்டினால் அமெரிக்கா அசிங்கப்பட்டு தான் நிற்க வேண்டும்.
மொத்தத்தில் இந்தியாவின் இந்த அச்சமற்ற தன்மை அதன் நெகிழ்வுத்தன்மை, உள் வலிமை மற்றும் அதன் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட ஆழமான அடையாளம் ஆகியவற்றிலிருந்து வருகிறது. இந்தியா இனி எந்த நாட்டிற்கும் அடிபணியாத ஒரு சுயாதீனமான, சக்திவாய்ந்த நாடாக உலக அரங்கில் முன்னேறி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
