அமெரிக்க – இந்திய வர்த்தக உறவு முறிவுக்கு ஒரே ஒரு இந்தியர் தான் காரணம்.. வெளிப்படையாக கூறிய டிரம்ப்.. அந்த ஒரு இந்தியர் யார்? டிரம்ப்பை கோபப்படுத்திய இந்தியர் யார்? அமெரிக்காவுக்கு அடிபணிய முடியாது என்று சொன்ன இந்தியர் யார்?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ஒரே ஒரு துணிச்சலான செயலால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ் நடந்த…

trump1 2

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ஒரே ஒரு துணிச்சலான செயலால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ் நடந்த ஒரு சந்திப்பில், அமெரிக்க குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து சில நிபந்தனைகளை முன்வைத்தனர். அந்த சந்திப்பில் நிகழ்ந்த விவாதங்களே இந்த உறவு விரிசலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிபந்தனைகள் என்னவெனில் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள், எண்ணெய் வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈரானுடனான வர்த்தகத்தை குறைக்க வேண்டும். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக இருந்தன. இதனால் அமெரிக்காவின் இந்தநிபந்தனைகளுக்கு பணியாமல், ஜெய்சங்கர் உறுதியான ஒரு பதிலை அளித்தார். “இந்தியாவின் முடிவுகள் அதன் சொந்த நலன்களை அடிப்படையாக கொண்டே எடுக்கப்படும்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் வெளியுறவு கொள்கைகளை மற்ற நாடுகள் தீர்மானிக்க முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

jaisankar

ஜெய்சங்கரின் இந்த பதில், அமெரிக்க அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களின் கூட்டாளிகள் எப்போதும் தங்களுக்கு கட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, இந்தியாவின் இந்த நிலைப்பாடு புதியதாக இருந்தது.

ஜெய்சங்கரின் இந்த துணிச்சலான செயல், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனிப்பட்ட கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவை ஒரு வல்லரசு நாடாக பார்க்கும் ட்ரம்ப், இந்தியா தன்னை ஒரு சமமான நாடாக கருதுவதை அவமரியாதையாக பார்த்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ட்ரம்ப் பகிரங்கமாக, “ஒரே ஒரு இந்தியர்” தங்களின் உறவை அழித்துவிட்டதாக வெளிப்படையாக புகார் கூறும் அளவுக்கு சென்றார்.

இந்தச் சம்பவம், உலக அரங்கில் இந்தியா ஒரு புதிய, துணிச்சலான வெளியுறவு கொள்கையுடன் வளர்ந்து வரும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை காட்டுகிறது.