அண்மையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் தனது புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம், தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பாதை குறித்து ஜோதிடர்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான ஒரு ஜோதிடர்களின் கருத்துக்கள் என்ன என்பதை பார்ப்போம்.
விஜய்க்கு முதல்வராகும் யோகம் இருக்கிறதா?
ஜோதிடர்களின் கூற்றுப்படி, விஜய்யின் ஜாதகம், 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் தமிழக அரசியலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பதற்கான வாய்ப்பு 100% உள்ளது என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நகர்வு
துணை முதல்வர்: தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின், அடுத்த கட்டமாக முதல்வர் பதவியை நோக்கிச் செல்வார் என்று அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் நல்ல ஆண்டாக அமையும். இந்த ஆண்டில் அவர் மக்களிடையே மேலும் பிரபலமடைவார். கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பதில் கவனம் செலுத்துவார். பைக் பேரணிகள், செஸ் ஒலிம்பியாட் போன்ற நிகழ்வுகளை மீண்டும் நடத்தி உலகளாவிய அங்கீகாரத்தை பெறுவார். இருப்பினும், எதிர்பாராத சில காரணங்களால் அவரது திட்டங்கள் தாமதமாகலாம், இது அவருக்கு இந்த ஆண்டு முழுவதும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும்.
2026-ஆம் ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக ஆவதற்கான வாய்ப்பு குறித்து கேட்டபோது, அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கூட்டணி முடிவுகள் தெளிவாக தெரிந்த பின்னரே, அதாவது 2025 டிசம்பர் மாதத்தில் தான் உறுதியாக கணிக்க முடியும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
