மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!

சென்னையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான நடைபாதைகள் இல்லை சென்னையின் பெரும்பாலான நடைபாதைகள்,…

electricity

சென்னையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான நடைபாதைகள் இல்லை

சென்னையின் பெரும்பாலான நடைபாதைகள், மின்சாரம் தாக்கும் அபாயமுள்ள திறந்தவெளி சந்திப்புப் பெட்டிகள் (junction boxes) மற்றும் மின் மாற்றிகளால் (transformers) நிரம்பியுள்ளன. சாலைகளில் தேங்கிய மழைநீருடன் இந்த மின்சாரப் பெட்டிகள் தொடர்பு கொள்ளும்போது, அது பொதுமக்கள், குறிப்பாக பாதசாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்த சூழலில் இன்று தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள அலட்சியத்தை காட்டுகிறது.

ஏழ்மையான நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை

இந்தியாவை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய பல நாடுகளில் கூட, பாதசாரிகளுக்கான நடைபாதைகள் இந்த அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதில்லை. அங்கு, மின்சார பெட்டிகள் பாதுகாப்பாகவும், முறையாக மூடப்பட்ட நிலையிலும் இருக்கும்.

இது ஒரு நாட்டின் வளர்ச்சியை குறிக்கும் குறியீடுகளில் ஒன்று. ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட முறையாக இல்லை என்பது துரதிஷ்டமானது

இதற்குப் பொறுப்பு யார்?

இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு மின்சார வாரியத்தின் பொறியாளர்கள்தான் என மக்கள் மத்தியில் பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது, பழுதடைந்த மின்சார பெட்டிகளைச் சீர் செய்யாதது போன்ற காரணங்களால், அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகின்றன. இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாதசாரிகளுக்கு பாதுகாப்பான, இடையூறு இல்லாத நடைபாதைகளை உருவாக்குவது என்பது ஒரு அடிப்படைத் தேவையாகும்.