கொஞ்சம் கூட அறிவே இல்லையா டிரம்ப்? ஒரு நாட்டின் அதிபராக இருந்து கொண்டு முட்டாளா இருக்கீங்களே.. மோடியை பாருங்க எவ்வளவு அறிவா இருக்காரு.. வறுத்தெடுக்கும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் இந்தியா போன்ற நட்பு நாடுகள் அன்னியப்பட்டு போவது குறித்து முன்னாள் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கவலை தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த நாடு, உண்மையான…

trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் இந்தியா போன்ற நட்பு நாடுகள் அன்னியப்பட்டு போவது குறித்து முன்னாள் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கவலை தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த நாடு, உண்மையான இராஜதந்திர முயற்சிகள் இன்றி தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருப்பது அதன் பெருமையை காட்டாது என அவர் கூறியுள்ளார்.

ஜான் கெர்ரியின் விமர்சனங்கள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்த ஜான் கெர்ரி, சமீபத்தில் நடந்த “இடி வேர்ல்ட் லீடர்ஸ் ஃபோரம்” (ET World Leaders Forum) நிகழ்ச்சியில் பேசும்போது, அமெரிக்கா – இந்தியா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் “துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்தார்.

அதிகப்படியான அழுத்தம்: ஒபாமா ஆட்சிக்காலத்தில், பேச்சுவார்த்தைகள் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் அமைந்திருந்தன. ஆனால், இப்போது “அதிகப்படியான உத்தரவு, அழுத்தம், இருப்பதாக கெர்ரி சுட்டிக்காட்டினார்.

மரியாதைக்குரிய பேச்சுவார்த்தை: டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையேயான மோதல் துரதிர்ஷ்டவசமானது என்றும், உண்மையான இராஜதந்திர முயற்சிகள் இன்றி தொடர்ந்து எச்சரிக்கை விடுப்பது ஒரு சிறந்த நாட்டின் குணம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா மீதான நம்பிக்கை: வர்த்தக பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாக கூறிய கெர்ரி, இந்தியாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் பாராட்டுக்குரியவை என்றும், குறிப்பிட்ட அமெரிக்க இறக்குமதிகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க இந்தியா முன்வந்திருப்பது ஒரு பெரிய மாற்றம் என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை தனது நண்பர்களாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா – இந்தியா உறவுகளில் அண்மை காலங்களில் ஏற்பட்ட பதற்றத்திற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன:

1. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா இரண்டாம் நிலை வரிகளை விதித்தது. இதன் காரணமாக, இந்திய ஏற்றுமதிகளுக்கான அமெரிக்க வரி 50%க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

2. இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, டிரம்ப்பின் மத்தியஸ்தம் செய்யும் பங்கை ஏற்க இந்தியா மறுத்ததும் இந்த மோதலுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

ஜான் கெர்ரியை போலவே, டிரம்பின் கொள்கைகள் இந்தியா போன்ற நட்பு நாடுகளை அந்நியப்படுத்துகின்றன என பல முன்னாள் அமெரிக்க அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜான் போல்டன்: டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட வரிகள், இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து விலக்கி வைப்பதற்காக அமெரிக்கா பல தசாப்தங்களாக மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளை பாதிக்கிறது என எச்சரித்தார்.

கிறிஸ்டோபர் பத்திலா: முன்னாள் அமெரிக்க வர்த்தக அதிகாரியான கிறிஸ்டோபர் பத்திலா, இந்த வரிகள் இந்தியா – அமெரிக்கா உறவுகளில் நீண்டகால சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், எதிர்காலத்தில் அமெரிக்கா நம்பகமான கூட்டாளியா என்ற கேள்வியை எழுப்பக்கூடும் என்றும் கூறினார்.

ஜெஃப்ரி சாக்ஸ்: பிரபல பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், டிரம்பின் இந்த நடவடிக்கையை “அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு முட்டாள்தனமான தந்திரம்” என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்தியா மீது 25% அபராதம் விதித்தது ஒரே இரவில் BRICS நாடுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒன்றுபடுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.