கலிபோர்னியாவின் அடிமடியில் கைவைத்த இந்தியா.. மறக்க முடியாத பதிலடி.. மோடியின் அடுத்தடுத்த அதிரடி முடிவால் டிரம்ப் அதிர்ச்சி..!

அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்குப் பதிலடி தரும் வகையில், கலிஃபோர்னியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்புக்கு இந்தியா கூடுதல் வரிகளை விதித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளில் மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.…

california

அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்குப் பதிலடி தரும் வகையில், கலிஃபோர்னியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்புக்கு இந்தியா கூடுதல் வரிகளை விதித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளில் மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா தனது GSP (Generalized System of Preferences) வர்த்தக திட்டத்தின் கீழ், வளரும் நாடாக இந்தியாவுக்கு அளித்து வந்த சலுகையை நிறுத்தியது. இந்த முடிவுக்கு பதிலடியாக, அமெரிக்கா மீது இந்தியா பல்வேறு பொருட்களுக்கு வரிகளை விதித்தது. அதில் பாதாம் பருப்பும் ஒன்று. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இருந்து வரும் பாதாம் பருப்புகளுக்கு செலவை அதிகரித்து, அதன் விற்பனையைப் பாதித்தது.

அமெரிக்காவின் வர்த்தக சலுகை ரத்துக்கு எதிரான ஒரு பதிலடி நடவடிக்கையாக இந்த வரிகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஓடு நீக்கப்பட்ட பாதாம் பருப்புக்கு 20% மற்றும் ஓடு நீக்கப்படாத பாதாம் பருப்புக்கு 17% கூடுதல் வரிகளை இந்தியா விதித்தது.

இந்த வரிகள் அமெரிக்க பாதாம் பருப்புகளை இந்திய சந்தையில் விலை உயர்ந்ததாக மாற்றின. இந்தியா, அமெரிக்காவின் பாதாம் ஏற்றுமதிக்கான ஒரு பெரிய சந்தையாகும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பாதாம்களில் 80% இந்தியாவில் தான் விற்பனையாவதாகக் ஊறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில் தற்போது இந்தியா, கலிபோர்னியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்புகளை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அமெரிக்க பாதாம் உற்பத்தியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இருப்பினும், இந்தியா தொடர்ந்து இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, பாதாம் பருப்பு உட்பட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க இந்தியா பரிசீலித்து வருகிறது.

இந்த வர்த்தக மோதல், இரு நாடுகளும் தங்கள் சொந்த பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் இந்த வர்த்தக மோதல்கள் சுமூகமான முடிவை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.