அமெரிக்காவில், அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து பாசிட்டிவ்வாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உறுதியான கொள்கைகள் மற்றும் உலக நாடுகளுடனான நட்புறவு ஆகிய காரணங்களுக்காக மோடி ஒரு ஹீரோவாக அமெரிக்க மக்களால் பார்க்கப்படுகிறார் என்று சில அமெரிக்க பொருளாதார நிபுணர்களும், அரசியல் விமர்சர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது “அமெரிக்கா தான் முதலில்” என்ற முழக்கத்துடன், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச உறவுகளில் கடுமையான நிலைப்பாடுகளை எடுத்தார். இது உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவாக இருந்தாலும், உலகளாவிய வர்த்தக கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பொருளாதார நிபுணர்கள் பலரின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்ததாகவும், இதனால் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. டிரம்பின் இந்த அணுகுமுறை, பல அமெரிக்கர்கள் மத்தியில், உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை முறை, அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மோடி உலக தலைவர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையை பெற்றுள்ளார். அவர் உலகளாவிய கூட்டணிகளை வலுப்படுத்தவும், அமைதியான மற்றும் பரஸ்பர நலன் கொண்ட உறவுகளை உருவாக்கவும் தொடர்ச்சியாக முயற்சிக்கிறார். உலகில் எந்த ஒரு நாட்டில் இயற்கை பேரிடர் நிகழ்ந்தாலும் முதல் உதவி அறிவிப்பு இந்தியாவிடம் இருந்து தான் வருகிறது. இந்த அணுகுமுறை, உலக அளவில் அவருக்கு பெரும் நன்மதிப்பை பெற்று தந்துள்ளது.
மோடியின் தலைமை, எந்தவொரு நாட்டையும் தனிமைப்படுத்தாமல், அனைவருடனும் இணக்கமான உறவுகளை பேணுவதை அடிப்படையாக கொண்டது. இந்த அணுகுமுறை, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் இந்தியாவின் நிலையை உயர்த்தியுள்ளது. எனவே, அமெரிக்காவின் சில பகுதிகளில் உள்ள மக்கள், மோடியின் தலைமையை போன்ற ஒரு அணுகுமுறை தங்களது நாட்டிற்கும் தேவை என்று கருதுகின்றனர். இது அமெரிக்காவின் எதிர்கால வர்த்தக மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஒரு புதிய திசையை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
