அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரி கொள்கைகள், அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்க செய்துள்ளன. டிரம்ப் தனது கொள்கைகளால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, பற்றாக்குறையை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், சமீபத்திய தரவுகள் அதற்கு நேர்மாறாக உள்ளன.
டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் மற்றும் அதன் விளைவுகள்:
டிரம்ப், தனது வரி கொள்கைகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து அதிக வருவாயை கொண்டு வந்து, அமெரிக்காவை வளமாக்கும் என்று கூறினார். ஆனால், இந்த வரிகள் அமெரிக்க நிறுவனங்களாலும், நுகர்வோர்களாலுமே செலுத்தப்படுகின்றன. இதனால், இறக்குமதி செலவுகள் அதிகரித்து, அந்த சுமை அமெரிக்க நுகர்வோரிடம் செல்கிறது. இது, சீனாவையும் இந்தியாவையும் தண்டிக்கவில்லை, மாறாக அமெரிக்கப் பொருளாதாரத்தையே பாதிக்கிறது.
பற்றாக்குறை அதிகரிப்பு:
ஜூலை மாதத்தில், அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை கடந்த ஆண்டை விட 20% அதிகரித்துள்ளது. இது, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து ரூ.21 பில்லியன் டாலர் கூடுதல் வரி வருவாய் கிடைத்த போதிலும் நிகழ்ந்துள்ளது.
அரசின் வருவாயை விட, செலவுகள் வேகமாக வளர்ந்துள்ளன. குறிப்பாக, தேசிய கடனுக்கான வட்டி செலுத்துதல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
பொருளாதாரத்தின் மீதான தாக்கம்:
டிரம்பின் தவறான வரி கொள்கைகள், பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கு பதிலாக, அதை மெதுவாக்குகின்றன. உயர்ந்து வரும் செலவுகள், குறைவான நுகர்வோர் செலவினங்களுக்கு வழிவகுக்கிறது. இது, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு தடையாக அமைகிறது.
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் இந்த வரி கொள்கைகளால், பத்து ஆண்டுகளில் பற்றாக்குறை குறையும் என்று கூறியிருந்தாலும், அது பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வாங்கும் சக்தி குறைதல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
எதிர்கால விளைவுகள்:
டிரம்ப் அடிக்கடி மாற்றிவரும் வரி கொள்கைகள், எதிர்கால வர்த்தக சூழலை கணிக்க முடியாததாக மாற்றியுள்ளது. வேலை வாய்ப்புகள் குறைந்து, பணவீக்க அழுத்தம் அதிகரித்து, கடன் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது, அமெரிக்காவிற்கு செழிப்பை கொண்டுவருவதற்கு பதிலாக, அதன் மக்களுக்கு சுமையை அளிப்பதாக உள்ளது. டிரம்ப் தனது முதல் பதவி காலத்தில், தேசிய கடனை முழுமையாக செலுத்தி, உபரி வருவாயை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது விலைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்தி என அனைத்திலும் அவரது வாக்குறுதிகளுக்கு நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
