அமெரிக்காவை கதற வைத்த கனடா.. மைக்ரோசாப்ட் உள்பட அமெரிக்காவின் 7 முக்கிய நிறுவனங்களுக்கு ஆப்பு.. அமெரிக்க ஆதிக்கத்திற்கு முடிவுரை எழுதியாச்சு.. அமெரிக்காவின் சோலியை முடித்த டிரம்ப்..!

உலகளாவிய அதிகார சமநிலை வேகமாக மாறி வரும் நிலையில், அமெரிக்காவின் பல முக்கிய நிறுவனங்கள் கனடாவின் புதிய வர்த்தக கூட்டுகளால் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன. கனடா, 11 வெவ்வேறு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில்…

canada 1

உலகளாவிய அதிகார சமநிலை வேகமாக மாறி வரும் நிலையில், அமெரிக்காவின் பல முக்கிய நிறுவனங்கள் கனடாவின் புதிய வர்த்தக கூட்டுகளால் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன. கனடா, 11 வெவ்வேறு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது அமெரிக்க உற்பத்தி மற்றும் வர்த்தக துறையின் வலிமையை பலவீனப்படுத்துவதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 7 நிறுவனங்கள்:

வால்மார்ட்: கனடாவின் புதிய வர்த்தக கூட்டணி நாடுகளால் சில்லறை வர்த்தக விதிகளே மாற்றியுள்ளன. தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பொருட்கள் இப்போது வால்மார்ட்டின் விநியோக மையங்களை தவிர்த்து, நேரடியாக கனடாவிற்கு அனுப்பப்படுகின்றன. இதனால், வால்மார்ட்டின் சந்தை 34% குறையக்கூடும் என கூறப்படுகிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் (GM): கனடாவின் புதிய ஒப்பந்தங்கள், தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து, ஜி.எம்.-மின் வட அமெரிக்க உற்பத்தி வலையமைப்பை அச்சுறுத்துகின்றன. கனடாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் இப்போது இந்த நாடுகளில் இருந்து பாகங்களை குறைந்த வரியுடன் வாங்க முடியும். இதனால் ஜி.எம். நிறுவனம் தனது மிகப்பெரிய கூட்டாளியான கனடாவிடம் இருந்து தனிமைப்படுத்தப்படலாம்.

எக்ஸான் மொபில்: அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கனடா தனது எரிசக்தி வளங்களை அமெரிக்க ஆலைகளில் சுத்திகரிப்பு செய்வதை தவிர்த்து, நார்வே, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு திருப்பிவிட்டுள்ளது.

கர்கில்: ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் போன்ற விவசாய வல்லரசுகளுடன் கனடா செய்துள்ள புதிய ஒப்பந்தங்கள், கர்கில் நிறுவனத்தின் ஆதிக்கத்தை அச்சுறுத்துகின்றன. ஆஸ்திரேலிய கோதுமை மற்றும் பிரேசில் சோயாபீன்ஸ் இப்போது கனடாவில் விலை குறைப்பு மற்றும் சலுகைகளுடன் விற்கப்படுவதால், அமெரிக்க விவசாய பொருட்களுக்கான தேவை குறைந்து வருகிறது.

மைக்ரோசாஃப்ட்: அமெரிக்க நெட்வொர்க்குகளை தவிர்த்து, பசிபிக் கடலுக்குக் கீழ் புதிய டிஜிட்டல் டேட்டா கேபிள்கள் கனடாவால் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், கனடாவின் டேட்டா நேரடியாக ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு செல்கிறது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என கூறப்படுகிறது.

ஜே.பி. மோர்கன் சேஸ்: கனடாவின் புதிய கூட்டுகள் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் மாற்று நிதி வலையமைப்பை உருவாக்கி வருகின்றன. இதனால் கனடிய வாடிக்கையாளர்கள் முதலீட்டு மேலாண்மை, கார்ப்பரேட் நிதி மற்றும் நாணய மாற்று போன்ற சேவைகளுக்கு மற்ற வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளனர்.

கேட்டர்பில்லர்: ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளுடன் கனடா இணைந்துள்ளது. இந்த நாடுகள் போட்டி இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. மேலும், கனடாவில் உள்ள ஆலைகளில் உற்பத்தி பணிகளை மாற்றிக்கொள்வதற்கான கூட்டு முயற்சிகளையும் அவை மேற்கொள்கின்றன. இது அமெரிக்காவின் தொழில் உற்பத்தியை பலவீனப்படுத்தும்.

மேற்கண்ட சவால்கள் பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வுகளுக்கும், அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் மூடலுக்கும் வழிவகுக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவில் வேலை இழப்பும் அதிகரிக்கும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா வர்த்தக மேலாதிக்கம் செய்து வந்த நிலையில் ஒருசில ஆண்டுகளில் அந்நாடு சிதைந்துபோகும் என பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.