கெட்ட கொழுப்பை கரைக்கும் பத்துவித பொருட்கள்

By Staff

Published:

981480bb7dab372a5d2ea02a701638c4

உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளால் உடல் பருமன், நோய்கள்ன்னு அவதிப்பட வேண்டி இருக்கு. இந்த உடல் உபாதை தரும் கெட்ட கொழுப்பை கரைக்க பணம், நேரம் என பலவகையில் முயன்றும் முடியாமல் அவதிப்படுறவங்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பார்க்கலாம்..

4c4e00498f0ed7a70cf51c9be6ac1c0a

பூண்டு

பூண்டை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.

b59f73f4c3194f7579a006c3b01a8c92

ஆப்பிள்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்ளான ஆப்பிள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும்.

3b29f0a6a9b7ba5e72980011f6b040a6

சோற்றுக் கற்றாழை

தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன் கொழுப்பும் குறையும்.

6732096543ae5a9c2724272af7ff4788

கொள்ளு

கொள்ளுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.

ff7262d4f4423eba55c95d7f9fe8a7b5

கறிவேப்பிலை

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்

2778a74ba814e6824abccc6bb26d3b88

மிளகு

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கி இதனை உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

365ba3fd580e71fa5e3532696ad38851

சீரகம்

தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.

7841c7318afea62bb3e1cc7954763155

இஞ்சி

இஞ்சியின் தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடித்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

இந்த பத்து பொருட்களை சரிவிகிதமாய் பயன்படுத்தி வந்தால் கெட்ட கொழுப்பு கரைந்து ஆரோக்கியமாய் வாழலாம்!

Leave a Comment