35,67,00,00,00,00,000 கோடி.. இது எவ்வளவு என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. இவ்வளவு முதலீடு அமெரிக்காவில் இருந்து வெளியேற வாய்ப்பு.. அமெரிக்காவை அழித்துவிடாதீர்கள்..! பொருளாதார நிபுணர்கள் டிரம்புக்கு எச்சரிக்கை..!

அமெரிக்கப் பொருளாதாரத்தில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களால் வைக்கப்பட்டிருக்கும் $41 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 35 லட்சத்து 66 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வெளியேறும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. அமெரிக்க…

41 trillion

அமெரிக்கப் பொருளாதாரத்தில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களால் வைக்கப்பட்டிருக்கும் $41 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 35 லட்சத்து 66 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வெளியேறும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் குறித்த நம்பிக்கை குறைந்து வருவதே இந்த வெளியேற்றத்திற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை குறைதல்

அமெரிக்கா நீண்ட காலமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதப்பட்டு வந்தது. ஆனால், அரசியல் நிலையற்ற தன்மை, கணிக்க முடியாத வர்த்தக கொள்கைகள், மற்றும் அதிகரித்துவரும் தேசிய கடன் ஆகியவை இந்த நம்பகத்தன்மையை குறைத்துவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிபர் டிரம்பின் 2025ஆம் ஆண்டு மறுதேர்வு ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. அவரது நிர்வாகம் 60க்கும் மேற்பட்ட நாடுகள், முக்கிய வர்த்தக பங்காளிகள் மற்றும் நட்பு நாடுகள் மீதும் 10% முதல் 50% வரை வரிகளை விதித்துள்ளது.

டிரம்பின் சுங்க வரி கொள்கையில் சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கின்றன. இந்த நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவை சுரண்டி வருகின்றன” என்று தனது கொள்கையை அவர் நியாயப்படுத்துகிறார்

அதிகப்படியான செலவினங்கள், தேசியக் கடனை பல டிரில்லியன் டாலர்கள் அதிகரித்து, கூட்டாட்சி பற்றாக்குறையை ஊதிப்பெருக்கியுள்ளன. இது அமெரிக்காவிற்கு பணம் கடனாக கொடுக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஆட்டம் காண செய்கிறது