அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இயற்கையான எரிவாயு வர்த்தகத்தில் ஒரு புதிய மோதல் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடிய பொருட்களின் மீது சுங்க வரிகளை விதித்ததை அடுத்து, இதற்கு பதிலடியாக கனடா தனது இயற்கையான எரிவாயு ஏற்றுமதியை அமெரிக்காவிற்கு நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதனை ஆசிய நாடுகளுக்கு திசை திருப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவது டிரம்ப்பை மேலும் கோபமடைய செய்துள்ளது.
டிரம்பின் வரிகள் மற்றும் கனடாவின் பதிலடி
டிரம்ப் நிர்வாகம் கனடிய பொருட்களுக்கு 25% சுங்க வரி விதித்தது, குறிப்பாக எரிசக்தி பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டது. இது கனடாவின் பொருளாதாரத்தை பாதித்தது. இதனால் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிற்கான தனது இயற்கை எரிவாயு விநியோகத்தை விரைவில் நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நாங்கள் டிரம்பின் வரிகளுக்கு அடிபணிய மாட்டோம்” என்று மார்க் கார்னி தெரிவித்ததோடு, கனடாவின் முதல் திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி கப்பல் ஆசியாவிற்கு திசை திருப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கனடாவின் இந்த நடவடிக்கையை எடுத்தால், அமெரிக்காவை சார்ந்து இருப்பதை குறைப்பதற்கும், அதன் எரிசக்தி இறையாண்மையை பெறுவதற்கும்உகந்ததாக இருக்கும். $40 பில்லியன் மதிப்பிலான LNG கனடா திட்டம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கிடிமாட் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது பசிபிக் பெருங்கடலுக்கு நேரடி அணுகலை வழங்குவதால், ஜப்பான், தென் கொரியா, மற்றும் சீனா போன்ற ஆசிய சந்தைகளுக்கு கப்பல் போக்குவரத்து நேரத்தை 20 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கும். இது கனடாவை உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஒரு முக்கியமான பங்காளராக மாற்றும்.
கனடாவின் இந்த நடவடிக்கையை எடுத்தால், அமெரிக்க எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவது, அமெரிக்காவில் எரிவாயு விலைகளை அதிகரிக்கக்கூடும், மேலும் இது நுகர்வோருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும். எனவே அமெரிக்க அதிபர் கனடாவுடன் நட்பை மீண்டும் புதுப்பிப்பதே நல்லது என்று அவருக்கு ஆலோசனை கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
