அமெரிக்காவில் விலைவாசி கிடுகிடு உயர்வு.. டிரம்ப்பின் கோமாளித்தனமான வரி கொள்கைகளால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்.. இந்தியர்கள் தாய்நாடு திரும்ப அதிக வாய்ப்பு..!

அமெரிக்காவில் மொத்த விற்பனை விலைகள் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 1% அதிகரித்துள்ளன. இது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத ஒரு மிகப்பெரிய உயர்வாகும். டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் வர்த்தக போர்…

USA1

அமெரிக்காவில் மொத்த விற்பனை விலைகள் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 1% அதிகரித்துள்ளன. இது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத ஒரு மிகப்பெரிய உயர்வாகும். டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் வர்த்தக போர் கொள்கைகளால் நேரடியாக விலைகளை உயர்த்துவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த விலை உயர்வு, வரவிருக்கும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை தூண்டியுள்ளது.

உற்பத்தியாளர் விலை குறியீட்டு எண் ஆண்டுக்கு 3.3% அதிகரித்துள்ளது. சேவை துறைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அதிக வரிகள் விதிக்கப்பட்ட இறக்குமதி பொருட்களான ஆடைகள், அணிகளன்கள், காபி போன்றவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. நிறுவனங்கள், இந்த அதிகரித்த செலவுகளை நுகர்வோர் மீது சுமத்த தொடங்கியுள்ளன. இதனால், இனிவரும் மாதங்களில் அமெரிக்க குடும்பங்கள் தங்கள் தினசரி செலவுகளுக்காக அதிக அழுத்தம் எதிர்கொள்ள நேரிடும் எனவும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினால் கூட அடிப்படை குடும்ப தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை

டிரம்பின் இந்த கோமாளித்தனமான வரி கொள்கைகள் திரும்ப பெறப்படாவிட்டால், அமெரிக்க குடும்பங்களின் நிதிநிலை மேலும் மோசமடையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வர்த்தக போர், இறக்குமதி பொருட்களின் விலையை உயர்த்துவதன் மூலம், உள்நாட்டு பணவீக்கத்தை அதிகரிக்கிறது. இது நுகர்வோரின் வாங்கும் சக்தியை குறைத்து, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு தடையாக அமையக்கூடும்.

இந்த விலை உயர்வு, அமெரிக்க பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. மேலும், தற்போதைய வர்த்தக போர்க் கொள்கைகளால் இந்தியர்கள் உள்பட அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாடு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.