இனி அமெரிக்கா வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்.. நட்பு நாடுகள் ஆகிறது இந்தியா – சீனா.. உலகின் மிகப்பெரிய 2 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முக்கிய பேச்சுவார்த்தை..

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடனான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பகுதிகளில் அமைதி நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உலகின் இரண்டு…

india vs china

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடனான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பகுதிகளில் அமைதி நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உலகின் இரண்டு மிகப்பெரிய நாடுகளின் தலைவர்களின் இந்த சந்திப்பு, இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்வதற்கும், உலகளாவிய நிலைமை மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த சில விவகாரங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதாக ஜெய்சங்கர் கூறினார்.

பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் நலன்

“பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்” ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா, சீனா நாடுகளின் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார். “கடினமான காலகட்டத்தை” இந்தியா அனுபவித்ததாக ஒப்புக்கொண்ட அவர், எதிர்கால உறவு இந்த மூன்று முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் முன்னோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய விவாதப் பொருள்கள்

இந்த சந்திப்பில் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள், புனித பயணங்கள், மக்கள் தொடர்பு, நதிநீர் தரவுகளை பகிர்ந்துகொள்ளுதல், எல்லை வர்த்தகம், இணைப்பு மற்றும் இருதரப்பு பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாளை சீன அமைச்சர் வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களுடன் எல்லை பிரச்னைகள் குறித்துப் பேசுவார் என்றும், பதற்றத்தை தணிக்கும் செயல்முறைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான விவாதத்தில், உலகளாவிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், ஆகிய முக்கிய விஷயங்கள் இந்த பேச்சுவார்த்தையில் முன்னுரிமை பெற்றன. மேலும் இந்தியா சார்பில், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் சீனா நடத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.