இந்தியாவை ஏன்யா தொட்ட.. டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கோபம்.. புரட்சி வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அதிர்ச்சியில் அமெரிக்க அரசு..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது விதித்துள்ள வர்த்தக போர் வரிகளுக்கு, அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப்பின் கொள்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அமெரிக்க…

USA

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது விதித்துள்ள வர்த்தக போர் வரிகளுக்கு, அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப்பின் கொள்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அமெரிக்க மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இது தொடர்பான ஒரு விரிவான ஆய்வு முடிவு தற்போது வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மீது வரி விதிப்புக்கு அமெரிக்க மக்கள் எதிர்ப்பு
அமெரிக்காவை சேர்ந்த ‘டெமாக்ரசி இன்ஸ்டிடியூட்’ நடத்திய சமீபத்திய ஆய்வில், 53% அமெரிக்கர்கள் இந்தியா மீது அமெரிக்கா வரிகளை விதித்திருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு, டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் அமெரிக்க மக்களால் பரவலாக ஏற்கப்படவில்லை என்பதை காட்டுகிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் எண்ணெய் வர்த்தகத்தை தொடர்வதால், டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியுடன் கூடுதலாக 25% வரி விதித்தது. இதன் மூலம், மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. மேலும், இந்த வரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியாவுடன் எந்தவித வர்த்தக பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த கடுமையான நிலைப்பாடு, இரு நாடுகளின் பொருளாதார உறவுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு

வர்த்தகப் போர் தொடர்பான பதட்டங்கள் நிலவினாலும், அமெரிக்க மக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர். இந்த ஆய்வில், 64% அமெரிக்கர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதார செல்வாக்கை நேர்மறையாக பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இந்தியா உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த பொருளாதார சக்தியாக உருவெடுத்து வருவது அமெரிக்க மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்பு

டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மேலும், ஆய்வில் பங்கேற்ற பத்தில் ஆறு அமெரிக்கர்கள், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் ஏற்பட்ட கடன், பணவீக்கம், மற்றும் தேக்கமடைந்த ஊதியங்கள் போன்றவற்றால் தங்கள் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த காரணங்களால் டிரம்ப்பின் பல்வேறு முடிவுகளுக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த அதிருப்தி, எதிர்காலத்தில் டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டங்களில் ஈடுபட கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.