குரோம் பிரவுசரை ரூ.2.9 லட்சம் கோடிக்கு வாங்க தயார்.. கூகுளுக்கே ஆச்சரியம் அளித்த சென்னை இளைஞர்.. சுந்தர் பிச்சை ஒப்புக்கொள்வாரா?

கூகுள் நிறுவனத்தின் தமிழ் வம்சாவளி சிஇஓ-வான சுந்தர் பிச்சையின் கூகுள் குரோம் பிரவுசரை ரூ.2.9 லட்சம் கோடிக்கு வாங்க, சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் முன்வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் ஒன்று கூகுள் நிறுவனத்திற்கு எதிராக…

chrome

கூகுள் நிறுவனத்தின் தமிழ் வம்சாவளி சிஇஓ-வான சுந்தர் பிச்சையின் கூகுள் குரோம் பிரவுசரை ரூ.2.9 லட்சம் கோடிக்கு வாங்க, சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் முன்வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் ஒன்று கூகுள் நிறுவனத்திற்கு எதிராக அளித்த தீர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

அரவிந்த் ஸ்ரீனிவாஸ் – ஒரு சிறு அறிமுகம்

அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தமிழ்நாட்டின் சென்னை நகரத்தை சேர்ந்தவர். இவர் ஐஐடி மெட்ராஸில் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர், அமெரிக்காவின் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். பின்னர், செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனங்களான ஓபன்ஏஐ மற்றும் கூகுள் பிரெய்ன் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டவர்.

பெர்பிளெக்சிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவனம்

அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து 2022-ஆம் ஆண்டு பெர்பிளெக்சிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உட்பட பல பெரிய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. இவர் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் போன்ற பிரபலங்களை சந்தித்து, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்தும், அவர்களின் துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்தும் விவாதித்துள்ளார்.

கூகுள் குரோம் பிரவுசரை வாங்க முன்வந்ததற்கான காரணம்

அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கூகுள் நிறுவனம் குரோம் பிரவுசரை பல சாதனங்களில் முன்பே நிறுவியதன் மூலம், உலாவி சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது எனத் தீர்ப்பளித்தது. இதனால், கூகுள் நிறுவனம் தனது சில தயாரிப்புகளை விற்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குரோம் உலாவியை வாங்க முன்வந்துள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையே தற்போது வரிவிதிப்பு விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தை இந்தியாவை சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்க முன்வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் டிரம்ப் உள்பட பல அமெரிக்கர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.