இந்தியா மீது டிரம்பின் 3 ஏமாற்றங்கள்.. இந்தியா செய்ய வேண்டிய மூன்று அதிரடி நடவடிக்கைகள்.. தானாக வழிக்கு வரும் டிரம்ப்..!

அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரி, இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஒரு தற்காலிக புயலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிவிதிப்பின் பின்னால் மூன்று முக்கிய இராஜதந்திர மற்றும் அரசியல் காரணங்கள் இருப்பதாக உலக அரசியலை உற்று கவனிக்கும்…

modi trump 2

அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரி, இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஒரு தற்காலிக புயலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிவிதிப்பின் பின்னால் மூன்று முக்கிய இராஜதந்திர மற்றும் அரசியல் காரணங்கள் இருப்பதாக உலக அரசியலை உற்று கவனிக்கும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் மனக்குறை மற்றும் அழுத்தம்

1. பிரிஸ்க் கூட்டணி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா பிரிஸ்க் கூட்டணியில் அங்கம் வகிப்பதை, அமெரிக்காவுக்கு எதிரான கூட்டணியாக கருதி அதிருப்தி கொண்டுள்ளார்.

2. டிரம்ப் ஏமாற்றம்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு தான் தான் காரணம் என்று டிரம்ப் பலமுறை உரிமை கோரினார். ஆனால், இந்தியா அதனை அங்கீகரிக்காதது அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

3. வர்த்தக அழுத்தம்: இந்த வர்த்தக வரி விதிப்பு என்பது, இந்தியா தனது பால் பொருட்கள், வேளாண்மை மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சந்தையை அமெரிக்காவுக்கு திறந்துவிட வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று அந்த இராஜதந்திரி கருதுகிறார்.

உலக அரங்கில் அமெரிக்காவின் இரட்டை வேடம்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. புடினுடன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாத விரக்தியால், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் வரி விதிக்கும் அமெரிக்கா, சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் அதேபோல் செய்யும் போது அமைதியாக இருப்பது அதன் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா கையாள வேண்டிய வியூகம்

இந்த சூழலில், இந்தியா எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான மூன்று வழிமுறைகளையும் அந்த இராஜதந்திரி முன்வைக்கிறார்:

1. தன்னாட்சி: இந்தியா தனது இறையாண்மை சார்ந்த மற்றும் தன்னாட்சி முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும்.

2. வியாபார ஈடுபாடு: வர்த்தகத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் அழுத்தங்களுக்கு பணியக் கூடாது. அதே நேரத்தில், எந்தெந்த துறைகளில் வர்த்தக தளர்வுகளை அளிக்கலாம் என்பதை ஆராய வேண்டும்.

3. அமெரிக்காவின் தேவை: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதையும், இந்தியா ஒரு பெரிய நுகர்வோர் சந்தையாக இருப்பதையும், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கியமான கூட்டாளியாக இருப்பதையும் இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் தற்போதைய வரிவிதிப்பு என்பது நிரந்தரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அந்த இராஜதந்திரி, இதுவொரு பயமுறுத்துதல் மட்டுமே என்றும், நாம் பயப்படவில்லை என்று தெரிந்தால் அமெரிக்காவே இறங்கி வந்து வரிவிதிப்பை வாபஸ் பெற்றுவிடும் என்றும், எனவே இந்த நிலை விரைவில் சரியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலைப்பாட்டில் இருந்து விலகாமல், இந்தியா தனது நீண்டகால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.