இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. இந்தியாவுக்கு வரி போட்டதால் தான் புதின் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார்.. டிரம்பின் அடாவடி பேச்சு.. புதின் யார் என்பது பேச்சுவார்த்தைக்கு பின் தெரியும்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு முன் பேட்டியளித்த அவர், ‘புதின் என்னுடன் பேச ஒப்புக்கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம், இந்தியாவுக்கு…

putin modi trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு முன் பேட்டியளித்த அவர், ‘புதின் என்னுடன் பேச ஒப்புக்கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம், இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான வர்த்தக வரிதான் என்று கூறி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தாக்கம் உண்டு,” என்று தெரிவித்த ட்ரம்ப், இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட கூடுதல் வரி, “அவர்களை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதிலிருந்து தடுத்து நிறுத்தியது” என்று குறிப்பிட்டார்.

புடினின் பேச்சுவார்த்தைக்கான காரணம் என்ன?

“ஒருவர் தனது இரண்டாவது பெரிய வாடிக்கையாளரை இழக்கும்போது, விரைவில் தனது முதல் பெரிய வாடிக்கையாளரையும் இழக்கக்கூடும் என்று தெரிந்தால், அது பேச்சுவார்த்தைக்கு வர ஒரு காரணமாக அமையலாம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார். இதன் மூலம், இந்தியா, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர்களில் ஒன்றாக இருப்பதால், அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, புடினை பேச்சுவார்த்தைக்கு வர தூண்டியதாக ட்ரம்ப் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மீதான வர்த்தக வரி ஒரு அரசியல் உத்தியா?

ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கள், இந்தியா மீது விதிக்கப்பட்ட வர்த்தக வரிகள் வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல, ரஷ்யாவை தனிமைப்படுத்தவும், புதினை பேச்சுவார்த்தைக்கு வர வைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு அரசியல் கருவி என தெரிகிறது.

உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விற்பனைக்கு இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை அதிகம் நம்பியிருந்தது. அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதன் மூலம், ரஷ்யாவின் வருமான ஆதாரங்களை துண்டித்து, புடின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுக்க முயன்றுள்ளது என்பது அவரது பேட்டியில் இருந்து தெளிவாகிறது.

பேச்சுவார்த்தையின் சாத்தியமான விளைவுகள்

அலாஸ்காவில் நடைபெறவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வர்த்தக வரி விவகாரம், முக்கிய இடம் பிடிக்கும் என்றும், இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி வாபஸ் பெறப்படலாம் அல்லது ஒத்தி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பேச்சுவார்த்தை ஒருவேளை தோல்வி அடைந்தால், அது இந்தியா மீதான டிரம்பின் கோபம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதுமட்டுமின்று பேச்சுவார்த்தையின்போது புதின் யார் என்பதை டிரம்ப் புரிந்து கொள்வார். இந்தியா மீது வரி விதித்தால் என்ன நடக்கும் என்பதையும் டிரம்புக்கு புரிய வைப்பார் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரி விதிப்புகளால் இந்திய பொருளாதாரம் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, அது அமெரிக்க மக்களுக்கும் பாதகமாக மாறியுள்ளது என்பதை டிரம்ப் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.