நோபல் பரிசுக்கு மோடி 2 முறைபரிந்துரை செய்யலாம்.. டிரம்பின் வரிவிதிப்பில் இருந்து தப்பிக்க இதுதான் ஒரே வழி..முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிண்டல்..! இந்த அவமானம் தேவையா?

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்தியாவிற்கு எதிரான கடுமையான வரி விதிப்புகளை “இருதரப்பு உறவில் ஏற்பட்ட…

trump nobel

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்தியாவிற்கு எதிரான கடுமையான வரி விதிப்புகளை “இருதரப்பு உறவில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு தவறு” என்று விமர்சித்துள்ளார். ட்ரம்ப் இந்தியாவின் மீது 50% வர்த்தக வரி விதித்ததை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

ட்ரம்ப்பின் தவறான அணுகுமுறை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தது மட்டுமன்றி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக 25% கூடுதல் வரியும் விதித்தார். இந்த அணுகுமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது என்று ஜான் போல்டன் குற்றம் சாட்டினார். இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கி ரஷ்யாவின் போர் செலவுகு உதவுகிறது என்று ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ட்ரம்ப் சீனாவையும் விமர்சித்தாலும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு போல் சீனாவிற்கு எதிராக வரிவிதிப்புகள் எதையும் விதிக்கவில்லை. “உக்ரைனில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே” என்று போல்டன் சுட்டிக்காட்டினார்.

போல்டனின் கடுமையான விமர்சனம்

மேலும் இந்த வரிவிதிப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அதிக காலம் ஆகும் என்று எச்சரித்தார். “கடந்த 30 நாட்களில் அமெரிக்கா இந்தியாவிடம் நடந்து கொண்ட விதம் மிகப்பெரிய தவறு என்றும் இந்தியாவின் நம்பிக்கையை மீண்டும் பெற பல ஆண்டுகள் ஆகும்” என்று அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப்பைச் சீண்டும் விதமாக, போல்டன் கூறிய இன்னொரு விஷயம் தான் ஹைலைட். ’நான் மோடிக்கு ஒரே ஒரு ஆலோசனை மட்டுமே கூறுகிறேன், அவர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் அமைதி பரிசு கொடுக்கலாம் என பரிந்துரை செய்தால், ஒருவேளை வரிவிதிப்பு வாபஸ் பெறப்படலாம் என கிண்டலாக கூறினார். பாகிஸ்தான் அப்படி கூறி தான் டிரம்பை ஏமாற்றி வருகிறது என்றும், பாகிஸ்தான் அரசு 2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப்பை முறையாக பரிந்துரைத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி எந்த ஒரு நாடும் டிரம்பின் வரிவிதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அவருக்கு நோபல் பரிசு பரிந்துரை செய்தால் போதும் என்றும், டிரம்பை பொருத்தவரை உலக நாடுகளின் நன்மை, அமெரிக்க மக்களின் நன்மை எல்லாம் இரண்டாம் பட்சம், நோபல் பரிசு மட்டுமே அவரது ஒரே குறி என்றும், அமெரிக்க மக்களே கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.