அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது புதிய ஆட்சியில் அவரே அறியாமல் அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து, அதற்கு பதிலாக கிரிப்டோகரன்சி மற்றும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கைகளை உலக எடுக்க வைக்கும் ஒரு வழியை திறந்து வைத்துள்ளார். ஒரு பிசினஸ்மேன் அதிபரானதால், உலக பொருளாதாரம் இனி புதிய திசையை நோக்கி நகரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். டாலரின் எதிர்காலம், கிரிப்டோகரன்சியின் எழுச்சி, மற்றும் தங்கம் உலக வர்த்தக கரன்சியாகும் வாய்ப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிரம்ப்பின் புதிய பொருளாதாரக் கொள்கைகள்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் விளைவாக, அமெரிக்கா விரைவில் கிரிப்டோ உலகின் தலைநகராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் கையெழுத்திட்ட கிரிப்டோவுக்கான புதிய சட்டம் அமெரிக்க டாலரை வலுப்படுத்துவதோடு, டிஜிட்டல் சொத்துகளை கண்காணிப்பதில் அமெரிக்காவை உலக தலைவராக நிலைநிறுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது.
டிரம்ப் கையெழுத்திட்ட மற்றொரு நிர்வாக உத்தரவு, 401(k) எனப்படும் அமெரிக்க ஓய்வூதியச் சேமிப்பு கணக்குகளில், கிரிப்டோகரன்சி மற்றும் பிற மாற்று சொத்துகளை சேர்க்க வழிவகுத்துள்ளது. இது கிரிப்டோ துறையை மேலும் பரவலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் விதித்த அநியாய வரியினால் அதிருப்தி அடைந்த இந்தியா உள்பட உலக நாடுகள் தங்கத்தை உலக வர்த்தகத்தின் பொது கரன்சியாக மாற்ற முயற்சித்து வருகின்றான. தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சியின் எழுச்சி
டிரம்ப்பின் இந்த கொள்கைகள் அமெரிக்க டாலரின் உலகளாவிய நிலையை நேரடியாக அச்சுறுத்துகின்றன.
உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலரிலேயே நடைபெற்று வருகிறது. ஆனால், டிரம்ப்பின் வர்த்தக போர் மற்றும் அதிக வரி விதிப்பு கொள்கைகள், பல நாடுகள் டாலரை நம்புவதை தவிர்க்கும் நிலைமையை உருவாக்கியுள்ளன. இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் உள்ள வர்த்தகத்தை உள்ளூர் கரன்சியில் மேற்கொள்ள தொடங்கியுள்ளன.
தங்கம் உலக வர்த்தகத்தில் ஒரு முக்கியக் கரன்சியாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், பல நாடுகள் அதை தங்கள் வர்த்தகத்தில் பயன்படுத்தக்கூடும்.
டிரம்ப்பின் கிரிப்டோ ஆதரவு கொள்கைகள், பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் மதிப்பை பெரிய அளவில் அதிகரித்துள்ளன. இதன் மூலம், கிரிப்டோகரன்சி நிதி உலகின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் கிரிப்டோ நாணயங்களும் உலக வர்த்தகத்தில் ஒரு கரன்சியாக பயன்படுத்தப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியா கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறைகள் தொடர்பாக இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் இந்த கொள்கைகள், இந்தியாவில் கிரிப்டோ குறித்த விவாதத்தை தூண்டியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு ஸ்டேபிள்காயின்கள் ஒரு சிறந்த தீர்வாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப்பின் இந்த கொள்கைகள், உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், சில சவால்களையும் கொண்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றங்கள் இந்த வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக தீர்ப்பளித்தால், அது டிரம்ப்பின் திட்டங்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதேபோல், கிரிப்டோகரன்சிகளில் உள்ள அதிக ஏற்ற இறக்கம் காரணமாக, அனைத்து நாடுகளும் அதை உடனடியாக வர்த்தகத்தில் பயன்படுத்த தயக்கம் காட்டலாம்.
மொத்தத்தில், டிரம்ப் தனது பிசினஸ்மேன் அனுபவத்தை பயன்படுத்தி, உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க முயல்கிறார். இது, அமெரிக்க டாலரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற மாற்று வழிகளுக்கு புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றாலும் டாலர் நாளடைவில் அதாவது 6 மாதத்தில் காலியாகிவிடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
