காந்தம் தயாரிப்பில் ஈடுபடும் இந்தியா.. ரூ.5000 கோடி திட்டம்.. இனி சீனா இறக்குமதி தேவையில்லை.. இந்தியாவை அசைக்க முடியாது..!

இந்தியாவின் கனரக தொழில்கள் துறை அமைச்சகம், அரிய மண் காந்தங்களின் (Rare Earth Magnets) உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ரூ.5,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிக்க உள்ளது. இந்த அரிய…

magnet

இந்தியாவின் கனரக தொழில்கள் துறை அமைச்சகம், அரிய மண் காந்தங்களின் (Rare Earth Magnets) உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ரூ.5,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிக்க உள்ளது. இந்த அரிய மண் காந்தங்கள், மின்சார வாகனங்கள், காற்றாலைகள், மின்னணுவியல், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் Semiconductor உபகரணங்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான கூறுகள் ஆகும்.

காந்தங்களின் உலகளாவிய விநியோகத்தில், சீனா சுமார் 80% பங்கை கொண்டுள்ளது. இதனால் இந்தியா காந்தங்களுக்காக சீனாவை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் திடீரென சீனா காந்த ஏற்றுமதியை நிறுத்தியதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவே காந்தங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் காந்தங்கள் உயர் செயல்திறன் கொண்ட மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் நவீன மின்னணு சாதனங்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காந்தங்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதால் உள்நாட்டு தேவை போக மீதத்தை ஏற்றுமதியும் செய்யலாம்..

PLI திட்டத்தின் கீழ், அரிய மண் காந்தங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை, நிதியுதவி கிடைக்கும். இந்த நிதி உதவி, உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான அதிக மூலதன செலவுகள் மற்றும் தொழில்நுட்ப சவால்களை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் இந்தியா காந்த உற்பத்தியில் தனிச்சிறப்பு பெறும்.

வேதாந்தா குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ குழுமம், சோனா பிஎல்டபிள்யூ, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற பல இந்திய நிறுவனங்களும், ஜப்பானின் புரோட்டீரியல் லிமிடெட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளன.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளியில் உள்ள சவால்களையும் இது சமாளிக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.