சென்னை, எக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தொழில்முறை இரசாயன பொருட்கள் தயாரிப்பது குறித்த மூன்று நாள் சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்துகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
பயிற்சி விவரங்கள்
தேதி: ஆகஸ்ட் 28, 2025 முதல் ஆகஸ்ட் 30, 2025 வரை.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: EDII-TN, EDII அலுவலக சாலை, எக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
பயிற்சியில் கற்றுத்தரப்படும் பொருட்கள்: இந்த பயிற்சியில், பல்வேறு வீட்டு உபயோக மற்றும் தொழில்முறை இரசாயன பொருட்கள் தயாரிக்க கற்றுத்தரப்படும். அவற்றில் சில:
கருப்பு பினாயில்
கட்டிங் ஆயில்
கிரீஸ்
தொழில்முறை சோப்பு எண்ணெய்
பைப் சுத்தம் செய்யும் பவுடர்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் திரவம்
பாத்திரம் கழுவும் சோப்பு
சலவை சோப்பு
டெட்டால்
துரு நீக்கும் திரவம்
கார் பாலீஷ்
தொழில்முறை தரை சுத்தம் செய்யும் திரவம் (
தரை சுத்தம் செய்யும் திரவம்
பாத்திரம் கழுவும் திரவம்
சலவை திரவம்
ஃபேப்ரிக் சாஃப்ட்னர் & கண்டிஷனர்
கை கழுவும் திரவம்
பயிற்சியின் நன்மைகள்
சொந்தமாகத் தொழில் தொடங்க படிப்படியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அரசின் மானியக் கடன் திட்டங்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்படும். மலிவான கட்டணத்தில் விடுதி வசதி உள்ளது.
பயிற்சியில் சேர தகுதிகள்
வயது: 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்/பெண்.
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவு செய்யும் முறை: இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமாகும். பதிவு செய்ய,
தொலைபேசி எண்: 8668102600 (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை).
இணையதளம்: www.editn.in
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
