இந்தியாவின் நிலைப்பாடு சரியே.. வரலாற்றில் மோடியின் முடிவு பேசப்படும்.. டிரம்ப் செய்வது மிகப்பெரிய தவறு இந்தியாவின் நட்பு அமெரிக்காவுக்கு மிக அவசியம்.. டிரம்பை விமர்சனம் செய்த முன்னாள் பென்டகன் அதிகாரி..

அமெரிக்காவின் முன்னாள் பென்டகன் அதிகாரியும், வெளியுறவு கொள்கை நிபுணருமான மைக்கேல் ரூபின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த வர்த்தகத் தடைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும் அவர் இந்தியாவின்…

pentagon

அமெரிக்காவின் முன்னாள் பென்டகன் அதிகாரியும், வெளியுறவு கொள்கை நிபுணருமான மைக்கேல் ரூபின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த வர்த்தகத் தடைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும் அவர் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது அமெரிக்க மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பிரதமர் மோடி இந்தியாவின் உரிமைகளுக்காக நிற்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் இதை நிச்சயம் நினைவில் கொள்வார்கள். இந்தியாவின் நிலைப்பாடு சரியானதே. இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில் ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை பேணுவதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் தனது எரிவாயு தேவைகளில் பெரும்பாலானவற்றை ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து தான் வாங்குகிறது. மேலும், அணுசக்தி பயன்பாட்டிற்கான யுரேனியம் ஹெக்ஸாஃப்ளோரைடு கூட ரஷ்யாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது.

அமெரிக்கா தனது சொந்த நலன்களுக்காக ரஷ்யா மற்றும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும்போது, இந்தியா இதேபோன்ற வர்த்தக உறவுகளை பேணுவதில் என்ன தவறு? இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என்றும் ரூபின் குற்றம் சாட்டினார்.

டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள் தவறானவை, அமெரிக்கா இந்த விவகாரத்தில் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய முயற்சிக்க வேண்டும். இந்தியாவின் நட்பு அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது என்றும், வர்த்தக தடைகள் போன்ற நடவடிக்கைகள் நீண்டகாலத்தில் அமெரிக்காவிற்கே தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா, நல்லுறவை பேணி வருகிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை, எந்த ஒரு அணிக்கும் சார்பாக இல்லாமல், தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது. இந்தச்சூழ்நிலையில், மைக்கேல் ரூபினின் கருத்துக்கள், அமெரிக்கா தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளன.