அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற கனவில், பல நாடுகளுடன் வர்த்தக போரை தொடங்கி, தற்போது இந்தியாவிடம் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறார். சீனாவுடன் மோதி பின்வாங்கிய அனுபவத்திற்கு பிறகு, இந்தியாவை அடிபணிய வைத்தால் மற்ற நாடுகளும் தானாகவே கட்டுப்படும் என அவர் தவறாக கணக்கு போட்டார். ஆனால், இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு, டிரம்ப்பின் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிடம் மோதிப் பின்வாங்கிய டிரம்ப்
டிரம்ப் முதலில் சீனா மீது அதிக வரிகளை விதித்து தனது வர்த்தக போரை தொடங்கினார். ஆனால், சீனா பதிலுக்கு வரி விதித்து அதிரடி காட்டியது. இதனால், சீனாவை எதிர்ப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த டிரம்ப், பின்வாங்கி, சீனாவுடனான மோதலை தவிர்த்தார். இந்த அனுபவத்திற்கு பிறகு, உலக நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால், முதலில் வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவை அடக்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.
இந்தியாவை வீழ்த்த டிரம்ப்பின் திட்டம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை காரணமாகக் கூறி, இந்தியா மீது 50% வரி விதித்தார் டிரம்ப். ஆனால், இது ஒப்புக்கு சப்பையான ஒரு காரணம் என்றும், இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே டிரம்ப்பின் உண்மையான நோக்கம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய சந்தை, மற்றும் அதன் சர்வதேச செல்வாக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த ஆசியாவையும் தனது கட்டுப்பாட்டில் வைக்கலாம் என டிரம்ப் கனவு கண்டார். ஆனால், அவரது இந்த கனவு மோடியின் அதிரடி நடவடிக்கைகளால் கலைய தொடங்கியது.
மோடியின் ராஜதந்திர விளையாட்டு: ‘பூனைக்கு மணி கட்டியது’ யார்?
டிரம்பின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், மோடி அரசாங்கம் தனது வெளியுறவு கொள்கையில் உறுதியாக நின்றது. அமெரிக்காவின் நிபந்தனைகளை இந்தியா புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தியது. இது, டிரம்ப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “இந்தியா போன்ற ஒரு நாடு என்னுடைய ராஜதந்திர திட்டங்களை எப்படி தோல்வியடையச் செய்யலாம்?” என்று அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தில், பூனைக்கு மணி கட்டுவது போல், டிரம்ப்புக்கு எதிராக மோடி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இது மற்ற நாடுகளுக்கும் ஒரு தைரியத்தை கொடுத்துள்ளது. இதனால், அடுத்து ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகள் ஆகியவை அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தொடங்கிய இந்த ராஜதந்திர நகர்வு, டிரம்ப்பின் உலக ஆதிக்க கனவை மொத்தமாக தகர்த்துவிடும் என்று அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
டிரம்ப் எதிர்கொள்ளும் உள்நாட்டு சிக்கல்கள்
டிரம்ப் ஒரு அதிபராக அல்லாமல், தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஒரு வர்த்தகர் போல செயல்படுகிறார் என அமெரிக்கர்களே குற்றம் சாட்டுகின்றனர். அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் எலான் மஸ்க் போன்ற பிரபலங்கள் அவரது நிர்வாகத்திலிருந்து விலகினர். முக்கிய பிரமுகர்கள் பலர் அவரது முடிவுகளை எதிர்க்க தைரியம் இல்லாமல் மௌனம் காக்கின்றனர். டிரம்பின் இந்த சர்வாதிகாரப் போக்கு, அவரது சொந்த கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்பும் சூழலை உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில், டிரம்ப்பின் ஆக்கிரமிப்பு வர்த்தக கொள்கைகள், அவருக்கு எதிராக ஒரு உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து, டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்க தயாராகி வருவது, டிரம்பின் அரசியல் வாழ்க்கைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
