இந்தியா-சீனாவை நட்பு நாடாக்கிய டிரம்புக்கு நன்றி.. பிசினஸ்மேன் டிரம்புக்கு மோடி வைத்த ஆப்பு.. டிரம்பின் வரி விளையாட்டும் மோடியின் ராஜதந்திரமும்..

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தக கொள்கைகளால் இந்தியா, சீனா போன்ற நாடுகளை அமெரிக்காவின் எதிரிகளாக மாற்றியுள்ளார். ஆனால், அவரது எதிர்பாராத வர்த்தகப் போர், பல ஆண்டுகளாக பகைமையாக இருந்த இந்தியா, சீனாவை…

putin modi trump

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தக கொள்கைகளால் இந்தியா, சீனா போன்ற நாடுகளை அமெரிக்காவின் எதிரிகளாக மாற்றியுள்ளார். ஆனால், அவரது எதிர்பாராத வர்த்தகப் போர், பல ஆண்டுகளாக பகைமையாக இருந்த இந்தியா, சீனாவை நட்பு நாடுகளாக்கியதோடு, ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்க ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ளது.

டிரம்ப்பின் ‘வரி விளையாட்டு’ மற்றும் மோடியின் ராஜதந்திரம்

“நட்பெல்லாம் இரண்டாம் பட்சம், பிசினஸ் தான் முக்கியம்” என்ற கொள்கையுடன் செயல்பட்ட டிரம்ப், இந்தியா மீது 50% வரிகளை விதித்து தனது வர்த்தக போரை தொடங்கினார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறினாலும், அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையே அவரது உண்மையான கோபத்திற்கு காரணம். அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு பணிய மறுத்ததால்தான், இந்தியா மீது வரி விதித்தார்.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை மோடி ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். தனிப்பட்ட நாடுகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராஜதந்திரத்தை அவர் கையாண்டார். இது, டிரம்ப்பின் வர்த்தக போரால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைகின்றன: டிரம்புக்கு நன்றி!

கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனைகள் காரணமாக பகைமை இருந்து வந்தது. குறிப்பாக அருணாச்சல பிரதேச விவகாரம் உச்சத்திற்கு சென்றது. ஆனால், டிரம்ப்பின் வர்த்தகப் போர், இந்த இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்தது. டாலரின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக அழுத்தம் காரணமாக, இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு புதிய பொருளாதார கூட்டணியை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளன. இதன் மூலம், டாலரின் பயன்பாட்டை குறைத்து, அதற்கு மாற்றாக ஒரு பொதுவான நாணயத்தையோ அல்லது தங்கத்தையோ வர்த்தகத்திற்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த முயற்சிக்கு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற பல நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

டாலரின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

“டாலர் இல்லை, தங்கம் தான்” என்று இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முடிவு செய்திருப்பது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அடியாக அமைந்துள்ளது. அமெரிக்கா ஒரு வல்லரசாக இருப்பதற்கான முக்கியக் காரணம், உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் தான். இந்த ஆதிக்கம் குறைந்துவிட்டால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணும்.

டாலருக்கு எதிரான கூட்டணி:

பிரிக்ஸ் நாடுகளின் இந்த முயற்சிக்கு, அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஆதரவு அளித்துள்ளதால், எதிர்காலத்தில் உலக வர்த்தகத்தில் டாலரின் பங்கு கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கு ஒரு கடுமையான சவாலாக இருக்கும்.

அமெரிக்க மக்களுக்கு பாதிப்பு:

டிரம்ப்பின் இந்த வர்த்தக போர், அமெரிக்காவிலேயே விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்தது. அமெரிக்க மக்களின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அவரது கொள்கைகள் அமெரிக்காவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக அமைந்துள்ளன.

மொத்தத்தில் ஒரு அதிபராக செயல்படாமல் ஒரு பிசினஸ்மேனால செயல்பட்ட
டிரம்ப்பின் சுயநலப் போக்கு மற்றும் வர்த்தக போரால், பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த நாடுகள் ஒன்றிணைந்து, அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. இது, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. டாலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதும், இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கத்தை நோக்கி நகர்வதும், டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் எவ்வாறு அமெரிக்காவுக்கே பாதகமாக முடிந்துவிட்டன என்பதை உணர்த்துகிறது.