அஜித் இன்று தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகர் ஆக உள்ளார். அவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் தலையில் தூக்கி வைச்சி ‘தல தல’ன்னு கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். பைக், கார் ரேஸ் என சினிமாவைத் தவிர்த்து பல துறைகளில் பிசியாக இருக்கிறார் அஜித். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என கோஷம் எழுப்பும்போது அஜித் தனது பட்டங்களை எல்லாம் துறந்தார்.
AK, அஜித்குமார் போதும். தல, அல்டிமேட் ஆகிய பட்டங்கள் வேண்டாம் என்றார். அஜித்துக்குப் பிறகு தான் கமலே தனக்கு உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்கள் எதுவும் வேண்டாம் என துறந்தார். அந்த வகையில் அஜித் நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பது பாராட்டத்தக்கது. அந்த வகையில் அஜித்தின் ஆரம்பகால சினிமாப்பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் பற்றிய தகவல் இப்போது வந்துள்ளது. வாங்க அவரு யாருன்னு பார்க்கலாம்.
அஜித்தின் ஆரம்பகால சினிமா பயணத்தில் எஸ்பிபி ஏதாவது உதவி செய்துள்ளாரா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அஜித்தின் ஆரம்பகால சினிமா பயணத்தைப் பொருத்தவரை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உதவி செய்ததாக சொல்ல முடியாது. அவர்தான் அஜித்தின் ஆரம்பகால சினிமாப்பயணத்துக்குப் பிள்ளையார் சுழியே போட்டவரு. ஆரம்பகாலத்தில் அஜித் தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆகவும், தமிழ்ப்படத்தில் நடிக்கவும் மிக முக்கியமான காரணமாக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமர்க்களம் படத்தில் எஸ்பிபி. அஜித்துக்காகப் பாடிய சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் அஜித்தின் திரையுல வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகவே அமைந்தது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


