டாலர் ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்த ‘பிரிக்ஸ்’ நாடுகள்; இந்தியா மீது ட்ரம்ப் விதித்த வரியும், அதன் அரசியல் விளைவுகளும்!
கடந்த சில நாட்களாக உலக அளவில் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. உலக வல்லரசு என அமெரிக்கா தன்னை தானே கூறிக்கொண்டாலும், துருக்கி, பாகிஸ்தான் போன்ற சில நாடுகளை தவிர்த்து வேறு எந்த நாடும் அதை உண்மையான நட்பு நாடாக ஏற்று கொண்டதில்லை. இந்த நிலையில், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடி வரிவிதிப்பு, உலக நாடுகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
டாலர் ஆதிக்கம் Vs பிரிக்ஸ் நாடுகள்
அமெரிக்கா இதுவரை வல்லரசு நாடாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம், டாலரின் உலகளாவிய வர்த்தக ஆதிக்கமே ஆகும். உலகம் முழுவதும் வர்த்தகம் டாலரில் நடப்பதால், அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டமைப்பில் உள்ள நாடுகள், தங்கள் சொந்த கரன்சிகளில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும்போது, இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்கிறது. இது டாலரின் ஆதிக்கத்தை படிப்படியாக குறைத்து வருகிறது. இதனால், அமெரிக்க பொருளாதாரம் கீழ்நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. இந்த ஆத்திரத்தில்தான், பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்கா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த 50% வரிவிதிப்பு, உலகம் முழுவதும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் மொத்த மக்கள் தொகை உலகின் மக்கள் தொகையில் சுமார் 40% ஆகும். இந்த நாடுகள் தொடர்ந்து தங்கள் சொந்த கரன்சிகளில் வர்த்தகம் செய்தால், டாலரின் மதிப்பு குறைந்து, அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமாக சரியும். மேலும், பிரிக்ஸ் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலகின் மொத்த ஜிடிபி-யில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் சீனா பயணம்: அமெரிக்காவிற்குப் பெரும் இடி
இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது, அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு குறித்து, இந்த மூன்று முக்கிய தலைவர்களும் ஒரே மேடையில் சந்திப்பது, அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், இந்தியா மீதான வரிவிதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நேரடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அமெரிக்காவை சர்வதேச வர்த்தகத்திலிருந்து தனிமைப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், அமெரிக்கா மற்ற நாடுகளிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது, அமெரிக்கத் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நரேந்திர மோடியை பகைத்துக் கொண்ட எந்த உலக தலைவரும், இறுதியில் அவரிடம் பணிந்து சரணடைந்துள்ளனர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதேபோல், விரைவில் டிரம்ப் இந்தியாவிற்காக பணிந்து மன்னிப்பு கேட்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
