அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய ஏற்றுமதிகள் மீது கூடுதல் வரி விதித்த ஒரு நாள் கழித்து, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சற்று வலுப்பெற்று வர்த்தகத்தை தொடங்கியது. அன்னிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 87.69 ஆக தொடங்கியது. இது முந்தைய நாள் வர்த்தக முடிவில் இருந்த 87.72 என்ற மதிப்பை விட 3 பைசா அதிகம் ஆகும். இது உலக நாடுகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்து. வரி விதித்தால் இந்திய ரூபாய் மதிப்பு சரியும் என எதிர்பார்த்த நிலையில், வலுப்பெற்றதை டிரம்ப் நினைத்தது ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை இன்று சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகளும், நிப்டி சுமார் 150 புள்ளிகளும் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக ரீதியாக ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்த போதிலும் இந்த சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று இந்திய பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 25% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இதன்மூலம் மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இது ஒரு “தண்டனை” நடவடிக்கை என்றும் அது தெரிவித்தது. மேலும், ரஷ்ய எண்ணெய் வாங்கும் மற்ற நாடுகளும் இது போன்ற தண்டனை நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய்க்கான வரியை டிரம்ப் 25 புள்ளிகள் மட்டுமே உயர்த்தியதால், சந்தை எதிர்பார்த்ததை விட குறைந்த உயர்வு காரணமாக இந்திய ரூபாய் சற்று உயர்ந்து, 87.70-ல் தொடங்கியது. இந்த 25 புள்ளிகள் உயர்வு ஆகஸ்ட் 28-ல் இருந்து தான் அமலுக்கு வரும். அதற்கு முன்னதாக அமெரிக்காவின் குழு ஒன்று இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், எந்த ஒரு வரி உயர்வும் அமெரிக்காவுக்கு செய்யப்படும் இந்திய ஏற்றுமதியைப் பாதிக்கும்” என்று தெரிவித்தார்.
டிரம்ப் இந்தியா மீது 25% வரி விதித்ததால், விநியோக குறைபாடு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $67.52 ஆக உயர்ந்தது. OPEC+ நாடுகளின் அதிக உற்பத்தி மற்றும் உலகளாவிய தேவைக்குறைவு பற்றிய கவலைகளுக்கு மத்தியில், புதன்கிழமை இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டு, ஓரளவு லாபத்தையும் பெற்றது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்தது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த முடிவை “நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது, மற்றும் விவேகமற்றது” என்று கடுமையாக விமர்சித்தது.
“எங்கள் இறக்குமதிகள் சந்தை காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. மேலும், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம் என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. “பல நாடுகள் தங்கள் தேசிய நலனுக்காகவே இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது, இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிகழ்வு, புவிசார் அரசியல் பதட்டங்கள் வர்த்தக உறவுகளிலும் எதிரொலிக்குமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது எரிசக்தி கொள்முதல், இறையாண்மை நலன்களுக்கும், உலகச் சந்தையின் தேவைகளுக்கும் ஏற்பவே உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
