யூடியூப் ஷார்ஸ் லைவ்வில் டோக்கன் சிஸ்டம்.. ஆபாச வீடியோவை லைவ் செய்யும் குடும்ப பெண்கள்.. சமூக சீரழிவும் எதிர்கால சந்ததியினருக்கான ஆபத்தும்..!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் ஷார்ட்ஸ் லைவ், தற்போது ஆபாசத்தின் கூடாரமாக மாறியுள்ளது. குறிப்பாக, குடும்ப பெண்கள் சிலர் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டு, அருவருக்கத்தக்க கமெண்ட்டுகளை பெறுவது சமூகத்தில் ஒரு பெரிய சீரழிவை ஏற்படுத்தி…

youtube

சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் ஷார்ட்ஸ் லைவ், தற்போது ஆபாசத்தின் கூடாரமாக மாறியுள்ளது. குறிப்பாக, குடும்ப பெண்கள் சிலர் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டு, அருவருக்கத்தக்க கமெண்ட்டுகளை பெறுவது சமூகத்தில் ஒரு பெரிய சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. இது யூடியூப் தளத்திற்கே ஒரு பெரிய ஆபத்தாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

யூடியூப் ஷார்ட்ஸ் லைவ்-ல் நடப்பது என்ன?

ஆபாச காட்சிகள்: யூடியூப் லைவ் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், குடும்பப் பெண்கள் பலர் ஆபாசமான உடை அணிந்து, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி வருகின்றனர். அவர்களின் பார்வையாளர்கள் ஆபாசமான கமெண்ட்டுகளைப் பதிவு செய்வதுடன், தனிப்பட்ட முறையில் தகாத உரையாடல்களை நடத்துகின்றனர்.

டோக்கன் முறை: இந்த லைவ் நிகழ்ச்சிகளில், பணம் சம்பாதிப்பதற்கு சில்வர், கோல்ட், டயமண்ட் என பல்வேறு டோக்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்கள் இந்த டோக்கன்களை பணம் கொடுத்து வாங்கி, யூடியூப் லைவ் செய்யும் பெண்களிடம் ஆபாச போஸ் கொடுக்க கோரிக்கை வைக்கின்றனர். டோக்கன்கள் மூலம் கிடைக்கும் பணம், பெண்கள் ஆபாசமான செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது.

சமூக சீரழிவு: ஒருபுறம் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதாக சொல்லிக்கொள்ளும் இந்தத் தளம், மறுபுறம், ஆபாசத்திற்கு ஒரு கதவைத் திறந்து வைத்துள்ளது. சமூகத்தில் ஒரு சில பெண்கள் செய்யும் இந்த செயல்கள், மற்ற குடும்ப பெண்களையும் தவறான எண்ணத்துடன் பார்க்கக் காரணமாக அமைகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்து

இந்த ஆபாசமான வீடியோக்கள், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை எளிதில் சென்றடைகின்றன. இது அவர்களின் மனதில் தவறான எண்ணங்களையும், பாலியல் குற்றங்களுக்கான மனநிலையையும் உருவாக்கக்கூடும்.

யூடியூப் என்பது, பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் ஒரு நல்ல தளமாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற ஆபாசமான வீடியோக்கள் காரணமாக, அதன் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.

யூடியூபுக்கு ஒரு சவால்

யூடியூப் ஷார்ட்ஸ் லைவ்-ஐ கட்டுப்படுத்துவது என்பது யூடியூப் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஆபாசமான கன்டென்ட்டுகளை தடுக்க, யூடியூப் கடுமையான விதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், இது யூடியூப் தளத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி ஆபாச இணையதளங்கள் போல் மாற வாய்ப்புண்டு.

காசுக்காக ஆபாசத்தில் இறங்கும் குடும்பப் பெண்கள், அவர்களின் குழந்தைகள், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை பற்றிச் சிந்திக்க வேண்டும்.