இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 57 வயதான நிக்கோலஸ் சாப்மேன் என்பவர், ஒரு பெண்ணின் பானங்களில் தனது விந்தணுவை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி, சாப்மேன் கொண்டு வந்து கொடுத்த காபியை குடித்தபோது, அதன் சுவை உப்பாக இருந்ததால், மீதி பானத்தை கீழே கொட்டியுள்ளார். அப்போது, அதில் “அடர்த்தியான, பிசுபிசுப்பான” பொருள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “அது என்னவென்று முதலில் எனக்கு தெரியவில்லை. அது விந்தணுவாக இருக்கும் என்று நான் சந்தேகிக்கவில்லை. அவர் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று கோப்பை காபி கொண்டுவருவார். முதல்முறை குடித்த பிறகு, நான் அதை கீழே கொட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அளவுகளில் அந்தப் பொருள் இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், தான் மலம் கழிக்கும்போது விந்தணுக்கள் வெளியேறும் ஒரு “ரகசிய நோய்” இருப்பதாக சாக்குப்போக்கு கூறினார். பின்னர், வேறு யாரோ ஒருவர் கேலிக்காக தனது விந்தணு மாதிரியை அந்த பெண்ணின் கோப்பையில் வைத்திருக்கலாம் என்றும், அது ஏன் நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும் சாப்மேன் விசாரணையின்போது சமாளித்தார். இருப்பினும் நீதிமன்றத்தில் இது ஒரு பாலியல் செயல் புரிந்த குற்றமாக கருதப்பட்டு அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, அவரது மருத்துவ பதிவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, அவர் தனது மருத்துவ பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
