இதுவரை வெளியான AI வீடியோக்களில் இதுதான் பெஸ்ட்.. இந்த ஆண்டு AI விநாயகர் சதூர்த்தி.. ஆன்மிகத்திலும் புகுந்துவிட்டது AI டெக்னாலஜி..!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்திக்கு நாடு தயாராகி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.…

vinayagar

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்திக்கு நாடு தயாராகி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று தொடங்கி, செப்டம்பர் 6 அன்று அனந்த் சதுர்த்தசியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கான ஒரு செயற்கை நுண்ணறிவு காணொலி, சமூக வலைத்தளங்களில் பரவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கணேஷ் சதுர்த்திக்கான ‘மூஷிகங்களின்’ தயாரிப்பு:

ஒரு காட்சி கதைசொல்லி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த AI காணொலி, விநாயகரின் வாகனமான மூஷிகங்கள் (எலிகள்) பண்டிகைக்கு தயாராவதை மிகவும் அழகாக படம்பிடித்துள்ளது.

அந்த காணொலி, தங்கள் கூட்டில் இருந்து தூங்கி எழும் எலிகளுடன் தொடங்குகிறது. அவை ஒரு காலெண்டரில் விநாயகர் சதுர்த்தி தேதியை குறித்துவிட்டு, உடனே வேலைகளில் இறங்குகின்றன.

இந்த சின்னஞ்சிறு உயிரினங்கள் கொடிகளை சுமப்பது, புற்களை பறிப்பது, தேங்காய் துருவி மோதகம் செய்வது, விநாயகரின் மற்ற பொருட்களையும் சுமந்து செல்வது என பண்டிகைக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கின்றன.

பிறகு, விநாயகர் சிலை உருவாக்கும் பணி தொடங்குகிறது. மூஷிகங்கள் அந்த சிலைக்கு வண்ணம் தீட்டி, பூக்களால் அலங்கரித்து, விளக்கேற்றி வழிபடுகின்றன.

இறுதியில், மகிழ்ச்சியுடன் விநாயகரின் தேரை சுமந்து வீதிகளில் இழுத்து செல்லும் காட்சியுடன் காணொலி நிறைவடைகிறது.

அந்த காணொலியின் குறிப்பில், “பக்தி என்னும் பாரத்தை சுமக்கும் மூஷிகங்கள் இருக்கும்போது நமக்கு சூப்பர் ஹீரோக்கள் எதற்கு? இந்த மென்மையான உயிர்கள், அன்பான விஷயங்கள் சிறிய செயல்களில் உள்ளன என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. அவை சுமக்கும் ஒவ்வொரு இதழும் ஒரு பிரார்த்தனையை சொல்கிறது. அவற்றின் ஒவ்வொரு அடியும் ஒற்றுமையின் கதையைக் கூறுகிறது. அவற்றின் பயணத்தில், நாம் ‘சேவை’யின் உண்மையான பொருளை காண்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணொலி, சமூக வலைத்தளங்களில் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. “2025-இல் நான் பார்த்த சிறந்த வீடியோ இதுதான்”, “எவ்வளவு புத்திசாலித்தனமாகவும், படைப்புத்திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது”, “AI எதற்காக உருவாக்கப்பட்டது என்பதற்கு இதுதான் சரியான உதாரணம்” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை 2.94 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இந்த காணொலி, பலரின் முகங்களில் புன்னகையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/DMvS0qjs9hw/