ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் எடுத்த தனித்தனி சர்வேக்கள்.. எல்லாத்திலும் விஜய் தான்.. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்..

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிமுக மற்றும் திமுக என இருபெரும் கூட்டணிகளுக்குள் சுழன்றுகொண்டிருந்த கருத்துக்கணிப்புகளையும்,…

vijay 2 1

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிமுக மற்றும் திமுக என இருபெரும் கூட்டணிகளுக்குள் சுழன்றுகொண்டிருந்த கருத்துக்கணிப்புகளையும், அரசியல் கணக்கீடுகளையும் “சூரியின் புரோட்டா காமெடி” போல முற்றிலுமாக மாற்றி மீண்டும் முதலில் இருந்து கோடு போடு என்பது போல் மீண்டும் விஜய்யை உள்ளடக்கிய கருத்துக்கணிப்பை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருத்துக்கணிப்புகளின் மாற்றம்:

விஜய்யின் வருகைக்கு முன்பு, கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் அதிமுகவுக்குச் சாதகமாகவும், சில கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவோ வெளியாகி வந்தன.

ஆனால், “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் விஜய் தனிக்கட்சி தொடங்கிய பிறகு, முந்தைய அனைத்துக் கணக்கீடுகளும் செல்லாததாகிவிட்டன.

சமீபத்தில், அதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக போன்ற முக்கிய கட்சிகள் ரகசியமாக நடத்திய கருத்துக்கணிப்புகளில், விஜய்க்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளதாம்.

ரகசியக் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்:

கசிந்த தகவல்களின்படி, அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் விஜய்க்கு சராசரியாக 80 முதல் 100 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சில கருத்துக்கணிப்புகளில் இந்த எண்ணிக்கை சற்றுக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் என்றும், ஆனால் பெரும்பாலான கணிப்புகள் அவருக்கு 80-100 இடங்கள் கிடைக்கும் என்றே தெரிவிக்கின்றன.

இந்த முடிவுகளை வைத்து பார்க்கும்போது, எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது. ஒருவேளை விஜய் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளும் அவருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவுக்கு எதிரான வாக்குகள், அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகள், அதிமுக – திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் பிடிக்காதவர்களின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், முதல் தலைமுறை வாக்குகள், இளைஞர்கள் வாக்குகள், பெண்கள் வாக்குகள் என ஒட்டு மொத்தமாக பாதகமே இல்லாமல் அனைத்து பகுதி வாக்குகளிலும் கை வைப்பதால் அவருக்கு 100 முதல் 120 தொகுதிகள் கண்டிப்பாக கிடைத்துவிடும் என்றே கூறப்பட்டு வருகிறது

இருப்பினும், தேர்தல் இன்னும் எட்டு மாதங்கள் இருப்பதால், அதற்குள் அரசியல் களத்தில் வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.