42 முறை காதலை சொன்ன காதலன், மறுத்த காதலி.. உலகின் மையமான க்ரீன்வீச்சில் நடந்த அதிசயம்.. 43வது முறை காதலை ஏற்று கொண்ட காதலி..!

லூக் வின்ட்ரிப் என்ற நபர், தனது காதலியான சாராவிடம் ஒரு முறை, இரு முறை அல்ல, 43 முறை தனது காதலை கூறிய நிலையில் 43வது முறையில் அவரது விடாமுயற்சிக்கு சாரா ஓகே என்று…

love

லூக் வின்ட்ரிப் என்ற நபர், தனது காதலியான சாராவிடம் ஒரு முறை, இரு முறை அல்ல, 43 முறை தனது காதலை கூறிய நிலையில் 43வது முறையில் அவரது விடாமுயற்சிக்கு சாரா ஓகே என்று சொல்லி அவரது காதலை ஏற்று கொண்டிருக்கிறார்.

2018-ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டின் லூக் வின்ட்ரிப், சாரா என்ற பெண்ணை சந்தித்த முதல் பார்வையிலேயே அவரை மணக்க கனவு கண்டார். டேட்டூ கலைஞரான லூக், அவரை பார்த்த ஆறாவது மாதத்தில் தான் முதல் முறையாக தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் சாரா அவரது காதலை ஏற்று கொள்ளவில்லை.

ஆனாலும் சாரா தன்னுடைய காதலை ஒருநாள் கண்டிப்பாக ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். எனக்குத் தெரியும், அவள்தான் என் வாழ்க்கை துணைவி என்று நான் மனதில் உணர்ந்தேன். ‘நீ அவளை வற்புறுத்துகிறாய்’ என்று என் நண்பர்கள் சொன்னார்கள், ஆனால் நான் இந்த உறவை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை அவளிடம் நிரூபிக்க விரும்பினேன்.

அடுத்த ஏழு ஆண்டுகளில் லூக் முயற்சியை விடவில்லை. அவர் தொடர்ந்து சாராவிடம் தனது காதலை தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் முந்தையதைவிட இன்னும் சிறப்பாக புரபோஸ் செய்ய முயற்சித்தார். ஒரு கோட் வாடகைக்கு எடுத்தது, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விருந்து ஏற்பாடு செய்தது, ஜமைக்கன் கடற்கரையில் குதிரை சவாரி செய்தது என பல முயற்சிகளைச் செய்தார்.

ஆனாலும் சாராவுக்குத் திருப்தியில்லை. லூக் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தார். 42-வது முறையாக அவர் காதலை தெரிவித்தபோது, “அடுத்த முறை நீங்கள் கேட்டால் நான் ‘ஆம்’ என்று சொல்வேன், ஆனால் அதுவரை காத்திருங்கள்,” என்று சாரா கூறினார். அப்போது லூக் மகிழ்ச்சி அடைந்தார். 43வது முறை மிகவும் வித்தியாசமாக புரபோஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஒரு வருடம் பொறுமையாக காத்திருந்த லூக், 2023-ல் சாராவை லண்டனின் கிரீன்விச்சிற்கு அழைத்து சென்றார். அந்த இடத்தில், லூக் மண்டியிட்டு மீண்டும் ஒருமுறை காதலை தெரிவித்தார். “இது உலகின் மையம், நீ என் உலகின் மையம், நீ என்னை மணந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியபோது, இந்த முறை, சாரா ஓகே என்று கூறி அவரது காதலை ஏற்று கொண்டார்.

இந்த ஆண்டு மே மாதம் ஜமைக்காவில் லூக் – சாரா திருமணம் நடந்தது. கடந்த காலத்தை நினைவுகூர்ந்த சாரா, லூக்கின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பால் தான் நெகிழ்ந்து போனதாக கூறினார். “அவர் இறுதியாக என் இதயத்தை வென்றார். அவர் ஒரு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கலாம். இவ்வளவு காலம் அவர் விடாமுயற்சியுடன் இருந்ததற்கு நான் நன்றியுள்ளவள்,” என்று சாரா தெரிவித்தார்.

  • மேலும், தனது கதை மற்ற பெண்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும் என அவர் நம்புகிறார். “அவர்கள் உங்களை உண்மையிலேயே நேசித்தால், அவர்கள் அதற்கான முயற்சியை எடுப்பார்கள். நீங்கள் தயாராக இல்லை என்றால் ‘ஆம்’ என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ‘இப்போது வேண்டாம்’ என்று நீங்கள் கூறலாம்,” என்றார் சாரா.