ஸ்வீடனைச் சேர்ந்த எரிகா லஸ்ட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம், ஊழியர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் வகையில் தினமும் 30 நிமிடங்கள் சுயஇன்பத்திற்காகவே பிரத்தியேக இடைவேளை வழங்கப்படுகிறது. இந்த இடைவேளை மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், பணியிடத்தில் பதட்டத்தை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எரிகா லஸ்ட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், அடல்ட் படங்களை தயாரிக்கிறது. 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனத்தில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் எரிகாவும் அவரது குழுவினரும் மன அழுத்தம், கவனச்சிதறல் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது, எரிகாவுக்கு இந்த யோசனை தோன்றியது. முதலில் ஒரு சோதனை முயற்சியாக இந்த இடைவேளையை அவர் அறிமுகப்படுத்தினார், அது வெற்றியடைந்தது. எனவே, மே 2022 இல், இது நிறுவனத்தின் நிரந்தர கொள்கையாக மாறியது.
எரிகா தனது சமூக வலைப்பதிவில் ’சுய இன்ப இடைவேளை கொள்கைக்கு பின்னால் உள்ள காரணத்தை விளக்கினார்: “2021 இல், பெருந்தொற்று தொடங்கி ஒரு வருடம் கழித்து, நானும் எனது குழுவும் போராடுவதை நான் கவனிக்க ஆரம்பித்தேன். பல வருட பெருந்தொற்று வாழ்க்கை எங்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நாங்கள் குறைந்த கவனம் செலுத்தினோம், மேலும் எரிச்சலடைந்தோம், ஒட்டுமொத்தமாக மிகவும் பதட்டமாக இருந்தோம்.
அப்போது தான் எங்களுக்கு சுய இன்ப இடைவேளை குறித்த ஐடியா தோன்றியது. தினமும் 30 நிமிட கூடுதல் சுய இன்ப இடைவேளை விடப்பட்டு, அதற்காக அலுவலகத்தில் “சுயஇன்ப நிலையம்” என்று அழைக்கப்படும் ஒரு தனிப்பட்ட இடத்தையும் உருவாக்கினோம்’ என்று தெரிவித்தார்.
“சுயஇன்பம் உங்களை மகிழ்ச்சியாகவும், நிதானமாகவும், மேலும் கவனம் செலுத்துபவராகவும் மாற்றுவது மட்டுமல்லாமல், இது படைப்பாற்றலை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் இது உங்கள் கவனம் மற்றும் காரியங்களை செய்வதற்கான உந்துதலையும் அதிகரிக்கிறது,” என்று அவர் தனது வலைப்பதிவு இடுகையில் மேலும் கூறினார்.
இதுவொரு கொள்கையாக அறிவிக்கப்பட்டாலும் எரிகா லஸ்ட் நிறுவனத்தின் எத்தனை ஊழியர்கள் இதற்கென ஒதுக்கப்பட்ட அலுவலக அறையை பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
