நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் பெரும்பாலும் தோன்றியவர். 1998ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நித்யா மேனன். அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நித்யா மேனன்.
அடுத்ததாக வெப்பம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உருமி, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இருமுகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் நித்யா மேனன். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து இவர் நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. இவரது நடிப்பு இயல்பாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். தற்போது பல படங்களில் கமிட்டாக பிசியாக நடித்து வருகிறார் நித்யா மேனன். தனுஷ் உடன் இவர் நடித்த இட்லி கடை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக நித்யா மேனனின் நடிப்பை அனைவரும் பாராட்டுகின்றனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நித்யா மேனன் தலைவன் தலைவி பட சூட்டிங்கில் நடந்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், தலைவன் தலைவி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு எங்களால் வீட்டிற்கு செல்லவே முடியவில்லை. நாங்கள் அவ்வளவு கனெக்ட் ஆகி விட்டோம். ஷூட்டிங் முடிந்த பிறகும் நாங்கள் அனைவரும் அமர்ந்து ஒரு மணி நேரம் எல்லா கதைகளையும் பேசி சிரித்து விட்டு அதற்குப் பிறகு ரொம்ப எமோஷனல் ஆகி தான் வீட்டிற்கு சென்றோம். அந்த அளவுக்கு இந்த படம் எங்களுக்குள் ஒரு கனெக்ட்டை உருவாக்கி இருந்தது என்று பகிர்ந்திருக்கிறார் நித்யா மேனன்.
