பிராவுக்குள் ஆமையை ஒளித்து வைத்து கடத்திய இளம்பெண்.. கடத்துவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா?

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு பெண் தனது மார்பகத்தினுள் இரண்டு ஆமைகளை மறைத்து வைத்து எடுத்து செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மியாமி சர்வதேச விமான நிலையத்தின் அதிநவீன…

bra

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு பெண் தனது மார்பகத்தினுள் இரண்டு ஆமைகளை மறைத்து வைத்து எடுத்து செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மியாமி சர்வதேச விமான நிலையத்தின் அதிநவீன ஸ்கிரீனிங் தொழில்நுட்பம் அந்த பெண்ணின் மார்பு பகுதியில் மறைக்கப்பட்ட ஒரு பொருளை கண்டறிந்தது. இதையடுத்து, அவர் தனிப்பட்ட சோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த சோதனையின் போது, அதிகாரிகள் பேண்டேஜ் துணி மற்றும் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட இரண்டு உயிருள்ள ஆமைகளை கண்டுபிடித்தனர்.

அந்த பெண் கடத்திய இரண்டு ஆமைகளில் ஒன்று உயிருடன் இல்லை. எஞ்சியிருந்த ஆமை, முறையான பராமரிப்புக்காக புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பெண்ணின் அடையாளம் அல்லது ஆமைகளின் வகை குறித்து எந்த தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

நீங்கள் ஆமையுடன் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான அனுமதியை பெற்று பாதுகாப்பாக பயணிக்கவும். விமானத்தில் செல்ல பிராணிகளை பற்றிய உங்கள் விமான நிறுவனத்தின் விதிகளை தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் தொடங்கலாம். சிறிய செல்ல பிராணிகள் சோதனை சாவடி வழியாக அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அவை எப்படி எடுத்து செல்லப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆடைக்குள் மறைக்கப்பட்டு கொண்டு செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.