நியூயார்க் நகரம் அதன் துடிப்பான சூழலுக்கும், பன்முகத்தன்மை கொண்ட ஆற்றலுக்கும் பெயர் பெற்றது. மன்ஹாட்டனின் மின்னும் வானலை முதல் புரூக்ளினின் மறைந்திருக்கும் அழகிய இடங்கள் வரை, இங்கிருக்கும் ஒவ்வொரு மூலையும் ஒரு ஹாலிவுட் திரைப்படக் காட்சி போல தோன்றும். பழமையின் கவர்ச்சியையும், நவீன அதிர்வையும் சரியாக சமன் செய்யும் ஒரு இடம் இது. ஆனால், நீங்கள் அதன் சுரங்கப்பாதைக்குள் இறங்கும் போது உண்மை நிலவரம் வெளிப்படுகிறது. அந்த கவர்ச்சி மறைந்து, அழுக்கு படிந்த நடைமேடைகள், ஆழமான நீர் தேக்கங்கள், குப்பைகள் மற்றும் சிறுநீர் வாடை என ஒரு விரும்பத்தகாத உண்மை தென்படுகிறது. இ
வைரல் வீடியோவின் காட்சிகள்:
ஒரு பயண வ்லோகரின் வீடியோவில் ஒரு அழுக்கு படிந்த நியூயார்க் நகர சுரங்க ரயில் நிலையத்திற்குள் நுழைவதை காட்டுகிறது. சிறுநீர் கறை படிந்த மூலைகள் மற்றும் தூண்கள், குப்பைகளால் நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள், நடைமேடையிலும் தண்டவாளத்திலும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் சோடா கேன்கள் போன்ற குப்பைகள், மற்றும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சூழல் என விரும்பத்தகாத காட்சிகள் அந்த வீடியோவில் தென்படுகின்றன. இந்த வீடியோவில் “நியூயார்க் சுரங்க ரயில் நிலையம்தான் மிக அசிங்கமானது” என்ற வாசகம் உள்ளது.
இந்த வீடியோவில் இணைக்கப்பட்ட குறிப்பில், “நியூயார்க் நகர சுரங்க ரயில் நிலையத்தின் அசிங்கமான தன்மைக்கு, அதன் அதிக பயன்பாடு, பழைய உள்கட்டமைப்பு, போதிய சுத்தம் செய்யாத நடைமுறைகள் மற்றும் சீரற்ற பராமரிப்பு இன்மை ஆகியவை காரணங்களாகும். தினசரி அதிக எண்ணிக்கையிலான பயணிகள், ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பதை கடினமாக்குகிறது, மேலும் காலாவதியான அமைப்புகள் மற்றும் பராமரிப்பில் முதலீடு இல்லாதது இந்த பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தின் எதிர்வினைகள்:
இந்த வீடியோ குறித்து இணையத்தில் பல கருத்துகள் பகிரப்பட்டன. ஒரு பயனர், “நல்ல வேலை, சகோ. தொடர்ந்து செய்” என்று பாராட்டினார். மற்றொருவர், “கிழக்கு அல்லது மேற்கு, இந்தியாதான் சிறந்தது” என்று கருத்து தெரிவித்தார். “நியூயார்க் சுரங்கப்பாதையின் உண்மையான காட்சியைப்பகிர்ந்ததற்கு மிக்க நன்றி” என்று வேறொருவர் நன்றி தெரிவித்தார்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் நிறைகள் மற்றும் குறைகள் இருக்கும். எனவே இதை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று இன்னொரு பயனர் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DMehSYXB3r-/
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
