இனி உலக அளவில் UPI: PayPal தளத்துடன் இணைப்பு.. சர்வதேச பணப்பரிமாற்றத்தில் புதிய அத்தியாயம்!

இந்தியாவில் UPI சேவை மிகவும் பரவலாகிவிட்ட என்பதும், சாலையோர கடைகள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது கார் ஷோரூம்கள் வரை எங்கும் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது என்பதும்…

upi paypal

இந்தியாவில் UPI சேவை மிகவும் பரவலாகிவிட்ட என்பதும், சாலையோர கடைகள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது கார் ஷோரூம்கள் வரை எங்கும் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது என்பதும் தெரிந்ததே. இந்த UPI வசதியை பயன்படுத்த இணைய இணைப்பு மட்டுமே தேவை. GPay, PhonePe, CRED போன்ற பல தளங்கள் UPI உடன் ஒருங்கிணைத்துள்ளன. இருப்பினும், இவை இந்தியாவுக்குள் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் தளங்கள் ஆகும்.

ஒருவேளை நீங்கள் இந்தியாவுக்கு வெளியே செல்லும்போது, ஒருசில நாடுகளை தவிர மற்றா நாடுகளில் UPI பயன்படுத்த முடியாது, பெரும்பாலான கட்டணங்கள் ரொக்கமாகவே இருக்கும். இது பணப்பரிமாற்றத்திற்குச் சிறந்த வழி அல்ல, மேலும் ரொக்கம் திருடுபோகவோ அல்லது தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது.

PayPal தளத்தில் UPI:

இந்த நிலையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் கட்டண தளமான PayPal உடன் UPI இப்போது ஒரு பகுதியாகிவிட்டது. இந்த தளத்தில் Venmo, UPI, PayPal, Tenpay Global மற்றும் Mercado Pago போன்ற சேவைகள் அடங்கும். இதன் காரணமாக பயனர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது UPI பயன்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல, நீங்கள் இந்தியாவிற்கு அனுப்பும் ஒரு அமெரிக்க வலைத்தளத்தில் ஷாப்பிங் செய்தால், அந்த வலைத்தளத்தில் பேபால் நுழைவாயில் (PayPal gateway) ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் UPI மூலம் பணம் செலுத்த முடியும்.

இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த தளம் சர்வதேச நபர்களிடையேயான பணப்பரிமாற்றங்களையும் ஆதரிக்கும். அமெரிக்காவில் Venmo-வை பயன்படுத்தும் ஒருவர், PayPal பயன்படுத்தி வேறு நாட்டில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப முடியும். பணப்பரிமாற்றங்கள் சர்வதேச அளவில் மேலும் தடையின்றி நடக்கும் என்பதால், இவை புரட்சிகரமான முன்னேற்றங்கள். மிக சிறந்த விஷயம் என்னவென்றால், இவை அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை.