உங்க வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமா? இந்த 9 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க!

வாழ்க்கையில ஒரு முன்னேற்றமும் இல்லையே. என்னத்த செஞ்சாலும் அப்படியே தானே இருக்குன்னு ஒரு சிலர் புலம்புவாங்க. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு என்பது இல்லை என்றே அர்த்தம். அதற்கு என்ன செய்யணும்? சிம்பிள் தான். இந்த 9…

வாழ்க்கையில ஒரு முன்னேற்றமும் இல்லையே. என்னத்த செஞ்சாலும் அப்படியே தானே இருக்குன்னு ஒரு சிலர் புலம்புவாங்க. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு என்பது இல்லை என்றே அர்த்தம். அதற்கு என்ன செய்யணும்? சிம்பிள் தான். இந்த 9 கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதும். அதன்பிறகு உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் முன்னேறலாம். வாங்க என்னன்னு பார்ப்போம்.

இப்போது நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்தமானதாக உள்ளதா? இதற்கு ஆம், இல்லை என்கிற ஒற்றை வரி வார்த்தைகள் தான் பதிலாக இருக்கும். அப்படியெனில் ஏன் என்கிற கேள்விகான பதிலை தேடுங்கள். உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளது? இதைக் கண்டறிய நம்மில் பலர் மிகவும் குழம்பிக்கொண்டு இருப்பார்கள். மிகவும் எளிது. நீங்கள் எந்த ஒரு செயலை மிகவும் விரும்பி அதாவது உங்களுடைய கற்பனை திறனை பயன்படுத்தி செய்கிறீர்களோ அதுதான் உங்களுடைய பேரார்வமாக இருக்கும்.

நீங்கள் விரும்பியதை உங்களால் செய்யமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நமக்குள் கனவு , ஆசை, விருப்பம் என நிறைய இருக்கும் ஆனால் அதை உங்களால் அடைய முடியுமா? அதற்க்கான சரியான பாதையில் பயணிக்கிறீர்களா? உங்களுடைய இலக்குகளை அடைய தேவையான திறன்கள் உங்களிடத்தில் உள்ளதா என்பதையும் , இல்லை எனில் அதை வளர்த்துக் கொள்வதற்க்கான திறன்கள் உங்களிடம் உள்ளதா என்பதை எண்ணிப்பாருங்கள்.

உங்களுடைய இலட்சியத்தை அடைவதற்க்கு உங்களுக்கு தூண்டுகோளாக இருப்பது எது? உங்களது குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம், உங்களது நட்பு வட்டாரமாக இருக்கலாம், உங்களது சுய தூண்டுதலாக கூட இருக்கலாம், ஏதேனும் நிகழ்வுகளாக கூட இருக்கலாம். அது என்ன என்பதை கண்டறியுங்கள்.

நீங்கள் செய்ய விரும்புவதை ஏன் நீங்கள் செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இது ஏன் வேண்டும். இதனால் என்ன பயன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விரும்பியதை அடைய நீங்கள் என்ன செய்யவேண்டும்? இதில் 2 விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். நீங்கள் தற்போது எங்கே இருக்கீறீர்கள்?

நீங்கள் இன்னும் செல்லவேண்டிய தூரம் எவ்வளவு? நீங்கள் அந்த தொலைவை அடைய உங்களுக்கு தேவையான உந்து சக்தி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்ய விரும்பியதை ஏற்கனவே யாராவது செய்திருப்பார்கள் அவர்களை கண்டுபிடியுங்கள்? இது ஏன் தேவையெனில் நீங்கள் அவர்கள் எவ்வாறு அதை செய்து முடித்தார்கள் என்கிற வழிமுறைகள் தெரிந்துகொள்ளலாம். மேலும் ஏற்கனவே இது அடையப்பட்ட ஒன்று என்பது உங்களுக்கு தெளிவாகும்.ஆக உங்களுக்குள்ளும் உத்வேகம் பிறக்கும்.

நீங்கள் செய்ய விரும்பியதை உங்களால் எப்போது ஆரம்பிக்க முடியும்? இதில் தெளிவாக இருந்தால் தான் செயலில் வெற்றி காண முடியும். நீங்கள் நினைத்ததை அடைந்து விட்டால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? எப்படிப்பட்டவர்களாக மாறுவீர்கள்? இதற்கான பதிலை நீங்கள் மனகாட்சிப்படுத்தலின் மூலம் பாருங்கள். மேற்கூறிய 9 கேள்விகளுக்கான விடைகளை தெளிவாக தெரிந்து அதை பின்பற்றினால் சுயவிழிப்புணர்வு உங்களுக்குள் கட்டாயம் ஏற்படும்.