சுயநல அரசியல் ஒழிக! மக்கள் நலன் ஓங்குக.. மும்முனையில் இரு முனையில் குழப்பம்.. ஜாக்பாட் அடிக்கும் விஜய்.. மீண்டும் காமராஜர் ஆட்சி?

  தமிழக அரசியல் களம் தற்போது வரவிருக்கும் தேர்தல்களை நோக்கி சூடுபிடித்துள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் கூட்டணிகளுக்குள்ளும், ‘கூட்டணி ஆட்சி’ குறித்த குரல்கள் வலுவாக ஒலிக்க தொடங்கியிருப்பது…

vijay flag

 

தமிழக அரசியல் களம் தற்போது வரவிருக்கும் தேர்தல்களை நோக்கி சூடுபிடித்துள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் கூட்டணிகளுக்குள்ளும், ‘கூட்டணி ஆட்சி’ குறித்த குரல்கள் வலுவாக ஒலிக்க தொடங்கியிருப்பது பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை, புதிதாக களம் காணும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் ‘கூட்டணி ஆட்சி’ முழக்கம்

அதிமுக -பா.ஜ.க. கூட்டணியில் கூட்டணி ஆட்சி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பே குறிப்பிட்டது போலவே, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவார்கள் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அதேபோல், தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட்டணி அரசில் தங்களுக்கு பங்கு வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இது, அ.தி.மு.க. தலைமைக்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியிலும் எழுந்த எதிர்பார்ப்பு

மறுபுறம், தி.மு.க. கூட்டணியிலும் கூட்டணி ஆட்சி குறித்த குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் அளித்த பேட்டியில், “கூட்டணி ஆட்சி வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். விசிக ஏற்கனவே பல ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி குறித்து பேசி வருகிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்தாலும் ஆட்சியில் பங்கேற்க முன்வராது என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், தி.மு.க.வுக்கு பெரிய தலைவலி இல்லை என்றாலும், கூட்டணிக்குள் எழுந்திருக்கும் ‘பங்கு’ கோரிக்கை ஒரு புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.

விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு: ‘மக்களுடன் கூட்டணி’ வியூகம்

இரு பெரும் கூட்டணிகளுக்குள்ளும் நிலவும் இந்த ‘கூட்டணி ஆட்சி’ குழப்பங்கள், புதிதாகக் களம் புகும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்குபெரிய அளவில் சாதகமாக அமைந்துள்ளது. “மாற்றம் என்பது மக்கள் கைகளில்… மக்கள் தான் எஜமானர்கள்… மக்களுடன் கூட்டணி வைப்போம்” என்று விஜய் கூறி வருகிறார்.

“கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் என்றால் என்னிடம் வாருங்கள்” என்று விஜய் நேரடியாகவே அழைப்பு விடுக்கிறார். ஆனால், அவரை நோக்கி மற்ற கட்சிகள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய்யின் தற்போதைய நோக்கம், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளை மட்டுமே தன் கூட்டணியில் சேர்ப்பதுதான் என கூறப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகள் வந்தால் போதும், மற்ற கட்சிகள் தேவையில்லை என்பது அவரது பார்வை. ஒருவேளை இந்த இரண்டு கட்சிகளும் வராவிட்டாலும் தனித்து போட்டியிடலாம் என்றும், மற்ற கட்சிகளில் உள்ள இந்த குழப்பங்கள் தனக்கு சாதகமாக இருக்கும் என்றும் விஜய் கருதுவதாகத் தெரிகிறது.

சுயநலமா? சேவை மனப்பான்மையா?

மொத்தத்தில், கூட்டணி ஆட்சி தேவை என்ற குரல் அரசியல் கட்சிகளின் சுய லாபமும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது, வருமானம் ஈட்டுவது போன்ற நோக்கங்களுமே பெரிதாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் கடைசி நம்பிக்கை: மீண்டும் ஒரு காமராஜர் ஆட்சி?

இந்த சூழலில், தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கை விஜய் தான் என்றும், மீண்டும் ஒரு காமராஜர் ஆட்சியை தமிழக மக்கள் விரும்பினால் விஜய்யை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரம்பரிய கட்சிகளின் உள் கட்டமைப்புகள் வலுவாக இருந்தாலும், தற்போது அவை பிளவுபட்டுள்ள நிலையில் இது விஜய்க்கு ஒரு புதிய பாதையைத் திறந்துவிடக்கூடும்.

எனவே கூட்டணி ஆட்சி என்ற குழப்பம் மும்முனை போட்டியில் விஜய்க்கு சாதகம் ஆகலாம் என கணிக்கப்படுகிறது.