இனிமேல் ரீல்ஸ் பார்ப்பவர்கள் ஸ்க்ரோல் செய்ய வேண்டாம்.. தானாகவே ஸ்க்ரோல் ஆகும்.. இன்ஸ்டாவில் புதிய அம்சம்..!

இன்ஸ்டாகிராம், பயனர்கள் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை தற்போது கையால் ஸ்வைப் செய்து கொண்டிருக்கும் நிலையில் இனிமெல் கையால் ஸ்க்ரோல் செய்யாமல் தானாகவே உலாவ உதவும் “ஆட்டோ ஸ்க்ரோல்” (Auto Scroll) என்ற ஒரு புதிய…

instagram

இன்ஸ்டாகிராம், பயனர்கள் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை தற்போது கையால் ஸ்வைப் செய்து கொண்டிருக்கும் நிலையில் இனிமெல் கையால் ஸ்க்ரோல் செய்யாமல் தானாகவே உலாவ உதவும் “ஆட்டோ ஸ்க்ரோல்” (Auto Scroll) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டதும், முதல் ரீல்ஸ் பிளே ஆகும். அந்த ரீல்ஸ் முடிந்ததும், தொடர்ந்து மற்ற ரீல்கள் தானாகவே ஸ்க்ரோல் ஆகும். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அம்சம் தற்போது ஐபோன் பயனர்களுக்காக சோதனை செய்யப்பட்டு வருகிறது, விரைவில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆட்டோ ஸ்க்ரோலை செயல்படுத்துவது எப்படி? ஆட்டோ ஸ்க்ரோல் அம்சத்தை இயக்க கீழே உள்ளவற்றை பின்பற்றவும்.

இன்ஸ்டாவில் ஏதாவது ஒரு ரீல்ஸை ஓப்பன் செய்யவும்.

கீழ் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.

மெனுவிலிருந்து “ஆட்டோ ஸ்க்ரோல்” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

செயல்படுத்தப்பட்டதும், ரீல்ஸ்கள் தானாகவே ஸ்க்ரோல் செய்ய தொடங்கும். இது தடையற்ற, கையால் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத அனுபவத்தை உருவாக்கும்.

இன்ஸ்டாகிராமில் புதிய 3:4 புகைப்பட வடிவம்

ஆட்டோ ஸ்க்ரோல் தவிர, இன்ஸ்டாகிராம் இப்போது 3:4 செங்குத்து புகைப்பட அளவை ஆதரிக்கிறது. இது முன்பு இருந்த 1:1 சதுரம் மற்றும் 4:5 போர்ட்ரெய்ட் வடிவங்கள் மட்டுமே இருந்தது. இந்த மாற்றம் பெரும்பாலான ஸ்மார்ட்போன் கேமராக்களின் இயற்கையான விகிதத்துடன் சிறப்பாக இணைகிறது.

இன்ஸ்டாகிராம் தற்போது பல புதிய அப்டேட்களை தீவிரமாகச் சோதித்து வருகிறது, அவற்றுள் சில இதோ:

AI-ஆல் இயக்கப்படும் எடிட்டிங் கருவிகள்

மேம்படுத்தப்பட்ட தேடல் விருப்பங்கள்

தனிப்பயனாக்கப்பட்ட ஃபீட் கட்டுப்பாடுகள்

இந்த வரவிருக்கும் அம்சங்கள் இன்ஸ்டாகிராம் பயனர்களின் அனுபவத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்துவதற்கான தளத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.